சாகர் படைவீரர் குடியிருப்பு
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலக் குடியிருப்புப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாகர் படைவீரர் குடியிருப்பு (Sagar Cantonment) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் உள்ளது.
Remove ads
மக்கள்தொகை
2001 [1] ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாகர் படைவீரர் குடியிருப்பு 35,872 என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் ஆண்கள் 52% ஆகவும், பெண்கள் 48% ஆகவும் இருந்தனர். சாகர் படைவீரர் குடியிருப்பின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். அப்போது இது தேசிய கல்வியறிவு சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 77% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 66% ஆகவும் இருந்தது. சாகர் படைவீரர் குடியிருப்பு, மக்கள் தொகையில் 15% பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளாவர்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இங்கு மக்கள்தொகை 40,513 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் 22,569 பேர் ஆண்களாகவும் 17,944 பேர் பெண்களாகவும் இருந்தனர். சாகர் படைவீரர் குடியிருப்பின் சராசரி கல்வியறிவு விகிதம் 87.69% ஆகும். அப்போது இது மாநில கல்வியறிவு சராசரியான 69.32% என்பதை விட அதிகமாக இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 92.54% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 81.44% ஆகவும் இருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads