சாக்ஷி அகர்வால்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.[1][2][3][4] பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கிய இவர், தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார். நடிப்பதைத் தவிர, சாக்ஷி பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார்.[2][5][6][7][8][9][10]
Remove ads
துவக்கக்கால வாழ்க்கை
இவர் இராஜஸ்தானைச் சேர்ந்த தந்தைக்கும், பஞ்சாப்பைச் சேர்ந்த தாயுக்கும் பிறந்தவாராவர்.[11][12][13] அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை தங்கப் பதக்கம் பெற்ற சாக்ஷி பின்னர் சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. படித்தார்.[14][15][16][17] பின்னர் லாஸ் ஏஞ்சல்சின் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.
இவரது திருமணமானது 2011 இல் சென்னையில் மிகவும் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் நடந்தது. ஆனால் இந்த இணையர் பின்னர் அறியப்படாத காரணங்களுக்காக பிரிந்தனர்.
Remove ads
தொழில்
இவர் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். மற்றும் பல ஒளிப்படங்களில் வடிவழகியாக தோன்றியுள்ளார். அவற்றில் சில ஏர்ஏசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, சக்தி மசாலா ஆகியவை அடங்கும் . மேலும் இவர் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர் ஹிப்-ஹாப், ஜூம்பா, பாலிவுட், பிலிம்பேர் விருதுகள், ஏசியானெட் விருதுகள், அம்மா விருதுகள், நடிகர் சங்கம் (மலேசியா) 2018, டஸ்லிங் தமிசாச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார்.[18][19][20][21]
Remove ads
திரைப்பட வரலாறு
தொலைக்காட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads