சாலிகிராமம், மைசூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாலிகிராமம் (Saligrama) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள சாலக்கிராமம் வட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். மாவட்டத்தில் பரப்பளவில் ஐந்தாவது மிகப்பெரிய நகரமான இது காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. இராமானுசர் சில காலம் இப்பகுதியில் இருந்ததால் வைணவர்கள் இந்த இடத்தை புனிதமான இடமாக கருதுகின்றனர்.[1]
சிறீ யோகா நரசிம்மர் சுவாமி கோயில், சமண பசாதிகள் மற்றும் ஒரு ஆசிரமம் உட்பட பல மத தளங்கள், பிரபலமான பழைய கோயில்கள் போன்றவை இங்கு அமைந்துள்ளன. தங்க வியாபாரி நாகேஷ் கெம்பாச்சர் என்பவர் இந்த இடத்தைச் சேர்ந்தவர்.
Remove ads
பின்னணி
12ம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் சிறீ இராமானுசர் இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். அவர் மேல்கோட்டைக்கு அருகில் உள்ள இந்த ஊருக்கு சாலக்கிராமம் என்று பெயரிட்டார். இன்றும் இங்கு அமைந்துள்ள ஒரு குளம் எவ்வித மாசுமிலாமல் பராமரிக்கப்படுகிறது. இந்த குளத்திற்கு எதிரே இராமானுசரின் காலடி செதுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads