சாவகம் பருந்து கழுகு

From Wikipedia, the free encyclopedia

சாவகம் பருந்து கழுகு
Remove ads

சாவகம் பருந்து கழுகு (Javan Hawk-eagle-நிசேட்டசு பார்தெல்சி) என்பது அசிப்பிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான அடர் பழுப்பு நிறக் கொன்றுண்ணிப் பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் தேசியப் பறவையாகும். இங்கு இது பொதுவாகக் கருடா பஞ்சசிலாவின் நிஜ வாழ்க்கை மாதிரி என்று குறிப்பிடப்படுகிறது. இது இந்து மதம் மற்றும் புத்த மதத்தில் பறவை போன்ற தெய்வமான கருடனைக் குறிப்பதால் மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்த பார்டெல்சு குடும்பத்தை நினைவுகூரும் வகையில் இதன் விலங்கியல் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் சாவகம் பருந்து கழுகு, காப்பு நிலை ...
Remove ads

வகைப்பாட்டியல்

இசுபிசைட்டசு பேரினக் கழுகுகளின் இறகுகளின் மாறுபாடு காரணமாக, சாவகம் பருந்து கழுகு 1953 வரை தனிச் சிற்றினமாக அங்கீகரிக்கப்படவில்லை. இது முன்பு இசுபிசைட்டசில் வைக்கப்பட்டது.[2] கழுகுகளின் பல-மரபணு இன வரலாற்று ஆய்வு விரிவான பல்வேறு தொகுதிமரபு உயிரினத் தோற்றத்தினை வெளிப்படுத்துகிறது.[3]

விளக்கம்

சாவகம் பருந்து கழுகு தோராயமாக 60 cm (24 அங்) செமீ (24 அங்குலம்) உடல் நீளத்தினைக் கொண்டது. இதன் தலை மற்றும் கழுத்து கருமை நிறத்தில் இருக்கும். அடிப்பகுதியில் பெரிய கருப்பு நிறப் பட்டைக் காணப்படும். கம்பீரமான மற்றும் சிக்கலான வடிவிலான இந்தக் கழுகு இதன் தலையில் ஒரு நீண்ட, கருப்பு முகடுகளைக் கொண்டுள்ளது. இந்த முகடு கிட்டத்தட்ட செங்குத்தாக வெள்ளை நிறத்தில் உள்ளது. கிரீடம் கருப்பு நிறத்திலும், செம்பழுப்பு தலையுடன் கழுத்தின் மேற்புறம் காணப்படும். பின்புறம் மற்றும் இறக்கைகள் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளன. பரந்த நுரையுடன் கூடிய கோடுகளைக் கொண்ட இலகுவான பழுப்பு வாலும், தொண்டை கருப்பு நிறக் கோடுகளுடன் நுரை வெள்ளை நிறத்தில் உள்ளது. இக்கோடுகள் வெண்மை மார்பகம் மற்றும் அடிப்பகுதி வரை ஓடுகிறது. இவை செம்பழுப்பு நிறத்துடன் தடித்த பட்டையுடன் காணப்படும். இளம் பறவைகள் நிறத்தில் ஒத்தவை, ஆனால் தெளிவான அடிப்பகுதிகளையும் மந்த நிறத் தலையையும் கொண்டுள்ளன.[4] பாலின வேறுபாடுகள் இல்லை.

Remove ads

வாழிடமும் பரவலும்

இந்தோனேசியாவில் காணப்படும் சாவகம் பருந்து கழுகு, சாவகத் தீவின் ஈரப்பதமான வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகிறது. கிழக்கு சாவகம்த்தில் இதன் வரம்பில் செம்பூ தீவு, புரோமோ டெங்கர் செமெரு தேசிய பூங்கா, மேரு பெடிரி தேசியப் பூங்கா மற்றும் அலாசு புர்வோ தேசியப் பூங்கா ஆகியவை அடங்கும். கெபுன் பினடாங் பண்டுங் போன்ற உயிரியல் பூங்காக்களிலும் இதைக் காணலாம்.[5]

நடத்தை

சாவகம் பருந்து கழுகு ஒரு துணை வாழ்க்கையின் மேற்கொள்வதாக நம்பப்படுகிறது. பெண் பொதுவாக ஒரு முட்டையைக் காட்டில் காணப்படும் மரத்தின் மேல் உள்ள ஒரு கூட்டில் இடுகிறது. இதன் உணவில் முக்கியமாகப் பறவை, பல்லி, பழந்தின்னி வௌவால் மற்றும் பாலூட்டிகள் உள்ளன.

பாதுகாப்பு

சாவகம் பருந்து கழுகு அரிதான கொன்றுண்ணிப் பறவைகளில் ஒன்றாகும். தொடர்ச்சியான வாழிட இழப்பு, குறைவான எண்ணிக்கை, வரையறுக்கப்பட்ட வரம்பு மற்றும் சில பகுதிகளில் வேட்டையாடுதல் காரணமாக, இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இது சி.ஐ.டி.ஈ.எசு. பின் இணைப்பு II-இல் பட்டியலிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2012-இல், மலாங்பாங், மேற்கு ஜாவா மற்றும் கிழக்கு சாவகம் உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 325 இணைச் சாவகம் பருந்து கழுகுகள் மட்டுமே வாழ்ந்தன. நடுச் சாவகம், மெராபி எரிமலை வெடிப்புகளால் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் தியெங் பீடபூமியில் விவசாயத்தால் காடுகள் அழிந்துள்ளன. ரசமாலா மரங்கள் மற்றும் சாவானிய எலிகள் இவற்றின் உணவுக்கு முன்னுரிமை அளிப்பதால் பறவையின் தழுவல் பரவல் மிகவும் கடினமானதாக உள்ளது. இதனுடைய எண்ணிக்கை 1,450 இணைகளாக இருக்க வேண்டும், இல்லையேல் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்போது இக்கழுகு சிற்றினம் 2025-க்குள் அழிந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads