சி. உ. வேல்முருகேந்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சி. உ. வேல்முருகேந்திரன் (C. U. Velmurugendran) என்பவர் ஓர் இந்திய நரம்பியல் நிபுணர், மருத்துவ எழுத்தாளர் மற்றும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நரம்பியல் துறையின் தலைவர் ஆவார்.[1] [2] இவர் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்தில் கெளரவ பேராசிரியராக உள்ளார். இவர், 2012இல் வெளியிடப்பட்ட முதுகெலும்பின் நோய்கள் உள்ளிட்ட புத்தகங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 2008ஆம் ஆண்டில், நாட்டின் உயரிய குடிமகனுக்கான பத்மஸ்ரீ விருதினை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[3]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மருத்துவர் சி. எஸ். உத்தமராயனுக்கு மகனாகப் பிறந்த வேல்முருகேந்திரன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் (எம்.பி.பி.எஸ்) பட்டம் பெற்றார். பின்னர் அதே நிறுவனத்தில் எம்.டி மற்றும் டி.எம். பட்டம் பெற்றார். 1985 முதல் 98 வரை மதராசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் நரம்பியல் துறைத் தலைவராகவும், 1999 முதல் 2016 வரை ஸ்ரீராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், 1999 இல் தகைசால் பேராசிரியராகத் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும், 2002ல் கெளரவப் பேராசிரியராகத் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வர மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் பணியாற்றினார்.[4] 1974-75 காலப்பகுதியில் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) சென்று ஒரு வருடம் பணியாற்றினார். பின்னர் 1975 - 1999 வரை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையில் பணிபுரிந்தார். இடையில் , திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (1994), மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (1996-1998) ஆகிய இரண்டிலும் ஆசிரிய தேர்வுக் குழுவில் பணியாற்றினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆஃப் சயின்ஸ் (மதிப்புறு முனைவர் பட்டம்) பட்டம் பெற்ற இவர், சென்னையில் நாள்பட்ட கால்-கை வலிப்பு நோயாளிகளுக்குத் தங்குமிடப் பட்டறை ஒன்றையும் [சான்று தேவை], சென்னையில் சர்வதேச குழந்தை நரம்பியல் காங்கிரஸ் 2016 உட்படப் பல மருத்துவ மாநாடுகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.[5] வேல்முருகேந்திரன் 2006ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ அறிவியல் குழுமத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 2008ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.[3] மதராசு நரம்பியல் அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார்.[7]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads