சிதம்பரம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சிதம்பரம் தொடருந்து நிலையம்map
Remove ads

சிதம்பரம் தொடருந்து நிலையம் (Chidambaram railway station, நிலையக் குறியீடு:CDM) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது தென்னக இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. சிதம்பரம் தொடருந்து நிலையம் சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருப்பதி, வாரணாசி, மும்பை போன்ற பல நகரங்களை இணைக்கிறது.

விரைவான உண்மைகள் சிதம்பரம், பொது தகவல்கள் ...
Remove ads

இடம் மற்றும் அமைப்பு

சிதம்பரம் தொடருந்து நிலையம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது. இதன் மிக அருகாமையில் சிதம்பரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் 175 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.

இரயில் தடங்கள்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற இடங்களுடன் சென்னையை இணைக்கும் முக்கிய தொடருந்து நிலையமாக அமைந்துள்ளது.


திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சிதம்பரம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 5.97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10] நிலையத்தின் முன்புறமுள்ள சாலைப் பணிகள், பயணிகளை ஆட்டோ, டாக்ஸி ஏற்றி இறக்கி செல்லும் பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், பாதசாரி நடைபாதைகள், பயணிகளின் நடைபாதை மற்றும் வசதியை மேம்படுத்துதல், புதிய பயணச்சீட்டு முன்பதிவு நிலையங்கள் மற்றும் காத்திருப்பு அரங்குகள் மற்றும் விஐபி லாஞ்ச் கட்டப்படும். மேம்படுத்தப்பட்ட தரைத்தளம், இருக்கை மற்றும் கழிப்பறை வசதிகளும் கட்டப்படும், ரயில் நிலைய இருக்கைகள், குடிநீர் வசதிகள் மற்றும் அழகியல் தன்மையுள்ள தங்குமிடங்கள் ஆகியவை பயணிகளுக்கு வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உறுதி செய்யும் வண்ணம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. நுழைவுப்பகுதியானது மாற்றுத்திறனாளிகள் எளிதில் அனுகும் வண்ணம் நன்கு வடிவமைக்கப்பட்ட சரிவுப் பாதைகளாக அமைக்கப்படும். ப்யணிகளுக்கு அத்தியாவசிய பயணத் தகவல்களை வழங்க நிலைய வளாகத்தில் புதிய எல்இடியிலான அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும். நிலையத்தின் கட்டிடங்கள் முழுவதும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்பு செயல்படுத்தப்படும். ரயில் அட்டவணைகள், பிளாட்பார மாற்றங்கள் மற்றும் பிற முக்கியமான பயணத் தகவல்கள் பற்றிய நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளபடுகின்றன.[11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads