சின்லாந்து தேசிய இராணுவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சின் தேசிய இராணுவம் (Chin National Army),தென்கிழக்காசியா நாடான மியான்மரின் மேற்கில் உள்ள சின் மாநிலத்தில் வாழும் சின் மக்களின் ஒரு ஆயுதக் குழுவாகும்.இது சின் தேசிய முன்னணி அமைப்பின் கீழ் செயல்படுகிறது. தற்போது சின் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு பகுதி சின் தேசிய இராணுவத்தின் கீழ் உள்ளது. இந்த இராணுவம் 20 பிப்ரவரி 1988 அன்று சின் தேசிய முன்னணியின் ஒரு அங்கமாக நிறுவப்பட்டது. 6 சனவரி 2012 அன்று மியான்மர் அரசு மற்றும் சின் தேசிய முன்னணி போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளது.[3]மியான்மர் கூட்டாட்சித் தத்துவததில் நம்பிக்கையுள்ள ஐக்கிய தேசியவாதிகளின் கூட்டமைப்பு குழுவில் சின் தேசிய இராணுவம் ஒரு உறுப்பினராக உள்ளது.

மியான்மர் நாட்டின் மேற்கில் உள்ள சின் மாநிலப் பகுதிகளை (பச்சை நிறம்) தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் சின் தேசிய இராணுவம் மற்றும் அதன் கூட்டாளிகள்
Remove ads
வரலாறு
சின்லாந்தின் சின் மாணவர்களால் நிறுவப்பட்ட அரசியல் குழுவான சின் தேசிய முன்னனியின் இராணுவமாக சின் தேசிய இராணுவம் செயல்படுகிறது.[4]இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு சின் தேசிய இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் வழங்குகிறது.[4][5]இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் இதன் தலைமையிடம் 2005ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.[4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads