சிம்பாங் அம்பாட்

From Wikipedia, the free encyclopedia

சிம்பாங் அம்பாட்map
Remove ads

சிம்பாங் அம்பாட் (மலாய்: Simpang Ampat; ஆங்கிலம்: Simpang Ampat; சீனம்: 新邦安拔; சாவி: سيمڤڠ امڤات) என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District), பத்து காவான் மக்களவை தொகுதியில் (Bukit Mertajam Federal Constituency) உள்ள ஒரு சிறு நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் சிம்பாங் அம்பாட், நாடு ...

இந்த நகரத்தின் வடக்கில் புக்கிட் மெர்தாஜாம் நகரம்; கிழக்கில் சூன்சாங் நகரம்; தெற்கில் சுங்கை பாக்காப் நகரம்; மேற்கில் பத்து காவான் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன. நான்கு நகரங்களுக்கு நடுவில் இந்த நகரம் அமைந்து இருப்பதால் இதற்கு சிம்பாங் அம்பாட் என பெயர் வைக்கப்பட்டது.

சிம்பாங் (Simpang) என்றால் மலாய் மொழியில் சந்திப்பு அல்லது சந்திக்கும் இடம்; அம்பாட் (Ampat) என்றால் எண்ணிக்கையில் நான்கு என்று பொருள்.

Remove ads

பொது

பட்டர்வொர்த் (Butterworth) நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சீனர்கள்; அவர்களைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

போக்குவரத்து

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் E1  (North–South Expressway Northern Route) (E1); மேலும் பினாங்கு இரண்டாவது பாலம் (Penang Second Bridge) அகிய இரு நெடுஞ்சாலைகளும் சிம்பாங் அம்பாட் நகரை இணைக்கின்றன.

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு (Penang International Airport) செல்ல சிம்பாங் அம்பாட் சாலைகள் இணைப்புகளை வழங்குகின்றன. அத்துடன் மலேசியாவின் கூட்டரசு பிரதான சாலை 1 1 (Federal Route) (1) இந்த நகரத்திற்கு மிக அருகில் செல்கிறது.

சிம்பாங் அம்பாட் தமிழ்ப்பள்ளிகள்

சிம்பாங் அம்பாட் நகரில் இரு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றின் பெயர் தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி; பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளிகளில் 300 மாணவர்கள் பயில்கிறார்கள். 35 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads