சிறீநிவாச பிரசாத்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீனிவாச பிரசாத் வெங்கடய்யா (Srinivasa Prasad Venkatayya) (பிறப்பு 1947), (பெரும்பாலும் வி சிறீநிவாச பிரசாத் என அறியப்படுகிறார்) என்பவர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நஞ்சங்குட் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் [4] மற்றும் சாமராஜநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு ஆறு முறை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
Remove ads
அரசியல் கட்சி
அவர் முதலில் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவர் . பின்னர் அவர் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பிச் சென்று சேர்ந்த பிறகு 2013 ஆம் ஆண்டில் நஞ்சங்குட் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தனது கட்சியை மாற்றி, டிசம்பர் 24, 2016 அன்று அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதன் காரணமாக நஞ்சன்கூடு தொகுதியில் 2017 ஆம் ஆண்டில் ஒரு இடைத்தேர்தலை அவசியமாக்கியது. அந்தத் தேர்தலில் அவர் காங்கிசரசு வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.அதன் பின்னர் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சாமராஜ் நகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆனார்.
Remove ads
அமைச்சகம்
சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசாங்கத்தில் 2013 முதல் 2016 வரை வருவாய் மற்றும் முஸ்ராய் அமைச்சராக பணியாற்றினார். [5] [6] [7] 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினராக இருந்த இவர், அடல் பிகாரி வாச்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உணவுமற்றும் நுகர்வோர் துறை அமைச்சராக இருந்தார்.
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads