சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிறுநீரக மாற்றமைப்பு சிகிட்சை (Renal replacement therapy) சிறுநீரகச் செயலிழப்பின் போது வழங்கப்படும் உயிர்காக்கும் சிகிட்சைகளைக் குறிக்கும் சொல்லாகும்.[1]

விரைவான உண்மைகள் சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை, MeSH ...

இதில் அடங்குவன:

  • குருதி கூழ்மப்பிரிப்பு,
  • வயிற்று உள்ளுறை கூழ்மப்பிரிப்பு,
  • குருதி வடித்தகற்றல் மற்றும்
  • மாற்றுச் சிறுநீரக சிகிட்சை.

இவை உடனடி சிறுநீரகச் செயலிழப்பிற்கு குணமளித்தாலும் நீண்ட நாள் செயலிழப்பிற்கு பொருந்தும் சிகிட்சை அல்ல. நீண்டநாள் கோளாறுகளுக்கு இவை உயிர் நீட்டுவிக்கும் சிகிட்சையாக (கூழ்மப்பிரிப்பு மூலம் நாள்பட்ட செயலிழப்பு நன்றாக மேலாளப்பட்டாலும், விரைவிலேயே தகுந்த மாற்றுச்சிறுநீரகம் கிடைக்கப்பெற்று வெற்றி பெற்றாலும்) மட்டுமே கருதப்படுகின்றன. சில தீவிரமான நிலைகளில், கூழ்மப்பிரிப்பிற்கு நன்கு குணமாகும் அல்லது மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கப்பெற்று உடலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நோயாளிகள் வேறு எந்த நோயினாலும் பாதிப்படையவில்லை எனில் நீண்டநாட்கள், நல்ல சிறுநீரகச் செயல்பாட்டுடன், வாழ முடியும்.

உடனடி செயலிழப்பில் ஆரம்பநிலையிலேயே கூழ்மப்பிரிப்போ அல்லது மாற்றுச் சிறுநீரகச் சிகிட்சையோ கொடுக்கப்பட்டால் நோயாளிக்கு பலன் கிடைப்பதோடு முழுமையான குணம் பெறவும் கூடும். இருப்பினும் முழுமையான செயல்பாட்டைப் பெறுதல் மிகவும் அரிதானது; பொதுவாக சிறிய பாதிப்பு இருக்கவேச் செய்யும்.[2]

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads