சீக்கிய சிற்றரசுகள்

தன்னாட்சியுரிமை கொண்ட சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு (ஆட்சி காலம்: 1716–1799) (Misl) என்பது தன்னாட்சியுரிமை கொண்ட சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பாகும்.[1][2]சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டுகளில் சீக்கியர்கள் அதிகம் வாழும் தற்கால இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதிகளில், மொகலாயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், சீக்கிய சமயத்தை பாதுகாக்கவும் உருவானது.[3] சீக்கிய சிற்றரசுகள் படைபலத்திலும், பரப்பளவில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும், மற்ற சிற்றரசுகளின் உதவியுடன் மொகலாயர் ஆதிக்கத்தில் இருந்த சீக்கியர்களின் பகுதிகளை கைப்பற்றி, சீக்கிய அரசை விரிவுபடுத்தியும், நிதி ஆதாரங்களையும் குவித்தனர்.[4] சீக்கியக் கூட்டமைப்பில் உள்ள சிற்றரசுகள் அமிர்தசரஸ் நகரில் ஆண்டிற்கு இரு முறை கூடி, அரசியல், சட்ட ஒழுங்கு குறித்து விவாதித்தனர்.

விரைவான உண்மைகள் சீக்கிய சிற்றரசுகள்ਸਿੱਖ ਮਿਸਲ, தலைநகரம் ...
Remove ads

வரலாறு

மொகலாயப் பேரரசன் ஔரங்கசீப், சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான தேஜ்பகதூரை தலைசீவியதால், மனம் புண்பட்ட சீக்கியர்கள் கிளர்தெழுந்து, மொகலாயர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, சீக்கியப் போர்ப் படைகளை நிறுவினர் [5] பின்னர் ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் அனைத்து சீக்கிய சிற்றரசர்கள் கூட்டமைப்பு ஒன்று கூடி 1799ஆம் ஆண்டில் சீக்கியப் பேரரசை நிறுவினர்.

சீக்கிய சிற்றரசுகள்

மேலதிகத் தகவல்கள் வலிமை (1780), சிற்றரசுகள் ...
Remove ads

சீக்கிய சிற்றரசுகளின் பரப்பு

Thumb
சீக்கிய சிற்றரசுகளின் கூட்டமைப்பீன் பகுதிகள்

சீக்கிய சிற்றரசுகள் சட்லஜ் ஆற்றினை மையமாகக் கொண்டு, இரண்டு முக்கியப் பிரிவாக பிரிந்து ஆண்டன. சட்லஜ் ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள 11 சீக்கிய சிற்றரசுகளை மஜ்ஜா சீக்கியர்கள் என்றும், சட்லஜ் ஆற்றின் தெற்கு பகுதியை ஆண்ட சீக்கிய சிற்றரசுகளை மால்வா சீக்கியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்..

சீக்கிய சிற்றரசுகள் நடத்திய போர்கள்

  1. கோல்வார் போர் (அமிர்தசரஸ், 1757)
  2. லாகூர் போர் (1759)
  3. சியால் கோட் போர் (1761)
  4. குஜ்ஜரன்வாலா போர் (1761)
  5. சியால் கோட் போர் (1763)
  6. அமிர்தசரஸ் போர் (1797)
  7. குஜராத் போர் (1797)
  8. அமிர்தசரஸ் போர் (1798)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads