சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம்map
Remove ads

சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம் அல்லது சுங்கை பீசி வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMKF) (ஆங்கிலம்: RMAF Kuala Lumpur (RMAF - Royal Malaysian Air Force) அல்லது Sungai Besi Air Base அல்லது Old Airport மலாய்: TUDM Kuala Lumpur (TUDM - Tentera Udara Diraja Malaysia); என்பது மலேசியா, கோலாலம்பூர், சுங்கை பீசி மாநகர்ப் பகுதியில் உள்ள அரச மலேசிய விமானப் படையின் இராணுவ வானூர்தி நிலையம் ஆகும். கோலாலம்பூர் நகரில் இருந்து 5 கடல் மைல்கள் (9.3 km; 5.8 mi) தொலைவில் உள்ளது.[2]

விரைவான உண்மைகள் சுங்கை பீசி இராணுவவானூர்தி நிலையம்Sungai Besi Air Base, சுருக்கமான விபரம் ...

இந்த வானூர்தி நிலையத்தை பழைய விமான நிலையம் என்றும்; சுங்கை பீசி ஏர்போர்ட் என்றும் அழைப்பது உண்டு. மலேசியாவில் கட்டப்பட்ட மிகப் பழைமையான வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.

Remove ads

வரலாறு

இந்த வானூர்தி நிலையம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (Kuala Lumpur International Airport) என்ற பெயரில் 1952-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை கோலாலம்பூரின் முக்கிய விமான நிலையமாகச் செயல்பட்டது. அனைத்துலக விமானப் போக்குவரத்து சுபாங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு (Sultan Abdul Aziz Shah Airport) மாற்றப்படும் வரை, இந்த சுங்கை பீசி வானூர்தி நிலையம் தான் முதன்மையான நிலையமாகப் பயன்படுத்தப்பட்டது.

அத்துடன், இந்த விமான நிலையமே கோலாலம்பூருக்குச் சேவை வழங்கிய முதல் விமான நிலையமாகும். மேலும் தற்போது கோலாலம்பூர் எல்லைக்குள் அமைந்துள்ள ஒரே விமான நிலையமாகவும் அறியப்படுகிறது.[3]

விமான நிலையத்தின் இன்றைய நிலை

முன்பு ஐக்கிய இராச்சியத்தின் அரச விமானப் படை நிலையம் (Royal Air Force) என அறியப்பட்டது. அதன் பின்னர் அரச மலேசிய விமானப் படை (ஆங்கிலம்: Royal Malaysian Air Force; மலாய்: Tentera Udara Diraja Malaysia); அரச மலேசிய போலீஸ் படை (Royal Malaysian Police); மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Malaysian Fire and Rescue Department); போன்ற அரசு சார்ந்த அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டது.

ஒரு வீட்டு மனை திட்டத்திற்காக இந்த விமான நிலையம் இடிக்கப் படுவதற்கு முன்மொழியப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் ஏதோ சில காரணங்களினால் நிறுத்தம் செய்யப்பட்டது. இப்போது இந்த விமான நிலையம் அவ்வப்போது விமானப் படையின் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த விமான நிலையம் 2018 மார்ச் 16-ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாகச் செயல்படுவதை நிறுத்திக் கொண்டது.[4]

Remove ads

சான்றுகள்

மேலும் காண்க

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads