சுதர்சன் பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுதர்சன் பாலம் (Sudarshan Setu), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள பேட் துவாரகை எனும் தீவு நகரத்தையும்,ஓகா நகரத்தின் கடற்கரையுடன் இணைக்கும் கடல் தொங்கு பாலம் ஆகும். சுதர்சன் கடற்பாலம் 2,320 மீட்டர்கள் (7,612 அடி) நீளம் கொண்டது. ரூபாய் 979 கோடி செலவில்[1] நிறுவப்பட்ட இப்பாலத்தை 25 பிப்ரவரி 2024 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டிற்கு அர்ப்பணித்தார். [2][3]
Remove ads
கட்டுமான அமைப்பு
தொங்கு பாலமான சுதர்சன் கடற்பாலத்தின் இருபக்கத் தூண்கள் காங்கிரீட் (கலவை) மற்றும் உருக்குக் கம்பிகளால் கட்டப்பட்டப்பட்டது. இருவழிப் பாதைகள் கொண்ட சதர்சன் பாலத்தின் அகலம் 27.2 மீட்டர்கள் (89 அடி) மற்றும் 2.5 மீட்டர்கள் (8 அடி) நடைமேடைகள் கொண்டது. இது2,320 மீட்டர்கள் (7,612 அடி) நீளம் கொண்டது. இத்தொங்கு பாலத்தின் எடையைத் தாங்கும் மையக் கம்பிகள் ஒவ்வொரு பக்கத்திலும் 900 மீட்டர்கள் (2,953 அடி) நீளம் கொண்டது. இப்பாலத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் 3 நெடுக்கங்கள் கொண்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads