சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (Sundari Neeyum Sundaran Naanum) 1999 ஆம் ஆண்டு பாண்டியராஜன் மற்றும் ஈஸ்வரி ராவ் நடிப்பில், தேவா இசையில், ஏ. என். ராஜகோபால் இயக்கத்தில், வி. தியாகராஜன் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்[1][2][3][4].
Remove ads
கதைச்சுருக்கம்
சுப்பிரமணி (பாண்டியராஜன்) புகைப்படக் கலைஞராக தொழில் செய்கிறான். தன் தாயுடன் (மனோரமா) வசித்துவருகிறான். அவன் நல்லதை நினைத்து செய்யும் செயல்களால் அவனுக்குப் பிரச்சனை வருகிறது.
பன்னீர்செல்வம் (அனு மோகன்) மற்றும் மங்கம்மாவிற்கு (சத்யப்ரியா) மூன்று மகள்கள். மூத்தவள் அனுஜாவின் (அனுஜா) கணவன் (செந்தில்) வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறான். இரண்டாவது மகள் அம்சவேணி (அனிதா). மூன்றாவது மகள் கிருஷ்ணவேணியும் (ஈஸ்வரி ராவ்) சுப்பிரமணியும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலை அறியும் மங்கம்மா, சுப்ரமணியை அடிக்க ஆட்களை அனுப்புகிறாள். சுப்பிரமணி அவர்களை அடித்துவிரட்டுகிறான். இதனால் திகைக்கும் மங்கம்மா கிருஷ்ணவேணியை வீட்டில் அடைத்து வைக்கிறாள். அவளுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுக்க ஆசிரியரை ஏற்பாடு செய்கிறாள். அவள் வீட்டிற்கு வரும் ஆசிரியர் (சார்லி) அம்சவேணியைக் காதலிக்கிறார்.
பன்னீர்செல்வம் தான்தான் சுப்ரமணியன் தாய்மாமன் என்ற உண்மையை அவனிடம் சொல்கிறார். சுப்ரமணியின் தந்தை இறந்தபிறகு தன் வீட்டுக்கு சுப்ரமணியை அவன் தாயுடன் அழைத்து வந்து தங்கவைக்க விரும்பினார் பன்னீர்செல்வம். மங்கம்மா அவர்களை வீட்டைவிட்டு விரட்ட சுப்பிரமணிக்கு உணவில் நஞ்சு கலந்துகொடுக்கிறாள். பன்னீர்செல்வம் அவனைக் காப்பாற்றி இருவரையும் வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று தங்கவைக்கிறார்.
பன்னீர்செல்வத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அந்த பெண்ணின் சகோதரனான சிவராமகிருஷ்ணன் (ரஞ்சித்), மங்கம்மாவிடம் இந்த விடயத்தைச் சொல்வதாக பன்னீர்செல்வத்தை மிரட்டுகிறான். பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் பணக்காரனைப் போல் நடித்து மங்கம்மாவை நம்பவைத்து அதன்மூலம் கிருஷ்ணவேணியைத் திருமணம் செய்ய திட்டமிடுகிறான். அவனுடைய திட்டத்தை சுப்பிரமணி மற்றும் பன்னீர்செல்வம் எப்படி முறியடிக்கின்றனர் என்பதே மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
- பாண்டியராஜன் - சுப்பிரமணி
- ஈஸ்வரி ராவ் - கிருஷ்ணவேணி
- ரஞ்சித் - சிவராமகிருஷ்ணன்
- மனோரமா - சுப்ரமணியின் தாய்
- செந்தில் - அனுஜாவின் கணவன்
- சார்லி - பெருமாள்
- அனு மோகன் - பன்னீர்செல்வம்
- பாண்டு - சின்னசாமி
- சத்யப்ரியா - மங்கம்மா
- அனுஜா - அனுஜா
- அனிதா - அம்சவேணி
- வையாபுரி
- சாப்ளின் பாலு
- கே. ஆர். வத்சலா - மணிமேகலை
- மோகனப்ரியா
- இடிச்சபுளி செல்வராஜ்
- வெள்ளை சுப்பையா
- டி. கே. எஸ். நடராஜன்
- சூர்யகாந்த்
- எம்.எல்.ஏ. தங்கராஜ்
- ரத்னகுமார்
- செல்லதுரை
- சித்ரா லட்சுமணன் - ராமலிங்கம்
Remove ads
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா.[5][6] பாடலாசிரியர்கள் காமகோடியன், கலைக்குமார் மற்றும் ரவிசங்கர்[7][8][9].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads