சுப்பிரமணியம் சீனிவாசன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

சுப்பிரமணியம் சீனிவாசன்
Remove ads

சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (S. S. Vasan, சனவரி 4, 1903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படுபவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன்' என்ற இதழை, 1928-இல் விலைக்கு வாங்கினார். இதழுக்கு தானே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது.[1] ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.

விரைவான உண்மைகள் சுப்பிரமணியம் சீனிவாசன்Subramaniam Srinivasan, பிறப்பு ...

1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கினார். அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.[2] இந்திய அரசும் தபால் துறையும் இவரது நூற்றாண்டு விழாவான 26 ஆகத்து 2004 அன்று இவரது உருவம் கொண்ட தபால்தலைகளை வெளியிட்டன.[3]

Remove ads

வாசன் இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்மொழிநடிகர்கள்குறிப்புகள்
1948சந்திரலேகாதமிழ்ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி-
1948சந்திரலேகாஇந்திரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி-
1949நிஷான்இந்திபி. பானுமதி, ரஞ்சன்-
1951சன்சார்இந்திடேவிட் ஏபிரகாம்
1952மிஸ்டர் சம்பத்இந்திமோதிலால், பத்மினி-
1954பாகுட் டின் ஹூயேஇந்திமதுபாலா
1955இன்சானியாட்இந்திதிலிப் குமார்-
1958வஞ்சிக்கோட்டை வாலிபன்தமிழ்ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி-
1958ராஜ் திலக்இந்திஜெமினி கணேசன், வைஜயந்திமாலா-
1959பாயிகம்இந்திதிலிப் குமார், வைஜயந்திமாலா-
1960இரும்புத்திரைதமிழ்சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா-
1961கர்ணாஇந்திராஜேந்திர குமார், ராஜ் குமார்-
1967அவுரத்இந்திராஜேஷ் கண்ணா, பத்மினி-
1968தீன் பகுரானியன்இந்திபிருத்விராஜ் கபூர்-
1969சத்ரஞ்இந்திராஜேந்திர குமார்-
Remove ads

வாசன் தயாரித்த திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்மொழிநடிகர்கள்குறிப்புகள்
1953ஔவையார்தமிழ்கே. பி. சுந்தராம்பாள்-

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads