சுல்தானா அமீனா மருத்துவமனை

மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் அமைந்துள்ள பொது மருத்துவமனை From Wikipedia, the free encyclopedia

சுல்தானா அமீனா மருத்துவமனைmap
Remove ads

சுல்தானா அமீனா மருத்துவமனை (மலாய்:Hospital Sultanah Aminah; ஆங்கிலம்:Sultanah Aminah Hospital) (HSA) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் அமைந்துள்ள பொது மருத்துவமனை ஆகும். மலேசியாவில் அரசு நிதியுதவியுடன் இயங்கும் மிகப் பழமையான வரலாற்று மாவட்ட பொது மருத்துவமனைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூறுகள் ...
Thumb
சுல்தானா அமீனா மருத்துவமனை அமைவிடம்

1882-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான பொதுநல மருத்துவமனை ஆகும்; வருமான நோக்கமற்ற இந்த மருத்துவமனை மலேசிய பொது சுகாதார அமைப்பின் முதன்மை மருத்துவமனையாகச் செயல்படுகிறது. அத்துடன் மருத்துவப் படிப்பிற்கான கற்பித்தல் மருத்துவமனையாகவும்; மற்றும் பிற மருத்துவமனைகளின் தலைமைப் பரிந்துரை மருத்துவமனையாகவும் செயல்படுகிறது.[2]

நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மலேசியாவின் மிகவும் பரபரப்பான மருத்துவமனைகளில் சுல்தானா அமீனா மருத்துவமனையும் ஒன்றாக விளங்குகிறது. இருப்பினும், நிதியுதவி பற்றாக்குறையின் காரணமாக அதன் சேவை ஓரளவிற்குப் பாதிப்பு அடைந்துள்ளது.[3]

Remove ads

அமைவு

சுல்தானா அமீனா மருத்துவமனை ஜொகூர் பாரு நகரப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் ஜொகூர் நீரிணையை நோக்கி அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் பரப்பளவு 98.6 ஏக்கர். தொடக்கக் காலங்களில், இந்த மருத்துவமனை ஜொகூர் பாரு பொது மருத்துவமனை (Johor Bahru General Hospital) என்று அழைக்கப்பட்டது.

ஜொகூர் பாரு நகர மையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெர்சியாரன் அபு பக்கர் சாலையில் இந்த மருத்துவமனை உள்ளது.

வரலாறு

சுல்தானா அமீனா மருத்துவமனை 1882-ஆம் ஆண்டு ஜொகூர் பாரு பொது மருத்துவமனையாக நிறுவப்பட்டது. அதன் தொடக்கத்திலிருந்தே ஜொகூர் பாரு நகரத்தின் பொது மருத்துவ மையமாகவும்; மற்றும் மாவட்டத்தின் முக்கிய பொது மருத்துவ மையமாகவும் செயல்பட்டு வருகிறது. தற்போதைய பிரதானக் கட்டிடம், செங்கல் முகப்பில் இசுட்ரீம்லைன் (Streamline Moderne) நவீன பாணியில் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய வளாகமாகத் திகழ்கிறது.

இந்த வளாகம் 1938 மற்றும் 1941-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. 1882-ஆம் ஆண்டு அசல் மருத்துவமனைக் கட்டிடத்திலிருந்து தற்போதுள்ள வளாகத்தை மாற்றுவதற்காகப் பிரதான கட்டிடம் கட்டப்பட்டது. 1970-களில், மருத்துவமனைக் கட்டிடம் மேலும் மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் பிரதான கட்டிடத்தின் முன் இரண்டு மாடி வளாகத்தில்; RM 267 மில்லியன் செலவில், விரிவான புதுப்பித்தலுடன் ஓர் அவசர சிகிச்சைப் பிரிவும் கட்டப்பட்டது.[4]

மலேசியாவில் முதல் முதுகலை மருத்துவ மையம் 1969-ஆம் ஆண்டு இந்தப் பொது மருத்துவமனையில்தான் நிறுவப்பட்டது.

Remove ads

முகவரி

Hospital Sultanah Aminah
80100 Johor Bahru
Johor Darul Takzim
Malaysia

இணையத் தளம்: jknjohor.moh.gov.my/hsajb/

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads