சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம்map
Remove ads

சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் அல்லது சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Sultan Abdul Aziz Shah Airport அல்லது Subang International Airport; மலாய்: Lapangan Terbang Sultan Abdul Aziz Shah அல்லது Lapangan Terbang Subang; சீனம்: 苏丹阿都阿兹沙机场; ஜாவி: لاڤڠن تربڠ انتارابڠسا سلطان عبدالعزيز شه) என்பது மலேசியாவின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

விரைவான உண்மைகள் சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம்Sultan Abdul Aziz Shah Airport, சுருக்கமான விபரம் ...

இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை, சுபாங் விமான நிலையம் (Subang Airport) அல்லது சுபாங் வானூர்தி நிலையம் என்றும் சுருக்கமாக முன்னர் அழைத்தனர்.

Remove ads

பொது

இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையம் மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் சுபாங் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வானூர்தி நிலையமாகும். இது பொது வான்வழிப் போக்குவரத்திற்கும் உள்ளூர் பயணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதனைக் குறைந்த கட்டண வான்சேவைகளுக்கான மையமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் சுபாங் ஜெயா நகர மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது.

முதன்மை வானூர்தி நிலையம்

1998-இல் சிப்பாங்கில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் திறக்கப்படும் வரை சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையமே கோலாலம்பூரின் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கியது.

தற்போது இந்த நிலையம் பயர்பிளை வானூர்திச் சேவை (Firefly), மலின்டோ ஏர் (Batik Air Malaysia) வணிக சேவைகளின் வானூர்திகளுக்கு அச்சு மையமாக விளங்குகிறது.

இருப்பினும் இந்த நிலையத்திற்கு அண்மையில் வசிப்போர் இங்கு தாரைப் பொறி வானுர்திகள் இயக்கப் படுவதையும்; அவை கிளப்பும் ஓசைக்காகவும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

Remove ads

வரலாறு

சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 1961-ஆம் ஆண்டில் தொடங்கின. 1965-ஆம் ஆண்டில் $64 மில்லியன் செலவில் முடிக்கப்பட்டன. எளிமையான வடிவமைப்பு. மிதக்கும் கான்கிரீட் ஓடுகளால் ஆன கூரையைக் கொண்டிருந்தது.

இந்த விமான நிலையம் 30 ஆகஸ்டு 1965 அன்று அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. மேலும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஓடுபாதையைக் (3.7 கி.மீ. நீளம், 45 மீ அகலம்) கொண்டு இருந்தது.[3]

மூன்று முனையங்கள்

1990-களில், விமான நிலையம் மூன்று முனையங்களைக் கொண்டிருந்தது. பன்னாட்டு விமானங்களுக்கான முனையம் 1; சிங்கப்பூர் விமான நிறுவனம் மற்றும் மலேசியா விமான நிறுவனம் மூலம் சிங்கப்பூருக்கான முனையம் 2; உள்நாட்டு விமானங்களுக்கான முனையம் 3.

தன்னுடைய சேவை காலத்தின் முடிவில், இந்த விமான நிலையம் குறைந்தது இரண்டு பெரிய தீ விபத்துகளை சந்தித்தது. இதனால் போக்குவரத்தை மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏர் ஏசியா விமான நிறுவனம்

1997-ஆம் ஆண்டின் இறுதியில், சுபாங் விமான நிலையம் 15.8 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. 2003-இல் முனையம் 1 இடிக்கப்பட்டது.[4]

ஜூலை 2002-இல், ஏர் ஏசியா விமானங்கள், கே.எல்.ஐ.ஏ. சிப்பாங் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பறக்கத் தொடங்கின. இருப்பினும் 2004-இல், ஏர் ஏசியா விமான நிறுவனம், இந்த நிலையத்தைத் தன்னுடைய முதன்மை மையமாகப் பயன்படுத்தக் கருதியது. ஆனால், அந்த திட்டத்தை மலேசிய அரசாங்கம் நிராகரித்து விட்டது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads