செந்தூல் எல்ஆர்டி நிலையம்

செந்தூல் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

செந்தூல் எல்ஆர்டி நிலையம்map
Remove ads

செந்தூல் எல்ஆர்டி நிலையம் அல்லது செந்தூல் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Sentul LRT Station; மலாய்: Stesen LRT Sentul; சீனம்: 冼都站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்கள் பரிமாறும் இடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3]

விரைவான உண்மைகள் AG2 SP2 செந்தூல், பொது தகவல்கள் ...

உயர்த்தப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், கோலாலம்பூர், செந்தூல் நகர்ப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு அருகில் மெதடிஸ்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (Methodist Boys Secondary School Sentul); வெஸ்லி மெதடிஸ்ட் பள்ளி (Wesley Methodist School); மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையம், நடுத்தர மற்றும் குறைந்த விலை மனைத்திட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

Remove ads

பொது

செந்தூல் எனும் அதே பெயரைப் பகிர்ந்து கொண்டாலும், செந்தூல் எல்ஆர்டி நிலையமானது  KC01  செந்தூல் கொமுட்டர் நிலையத்துடன் இணையவில்லை. இரண்டு நிலையங்களும் ஏறக்குறைய 800 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன. இருப்பினும் இரண்டு நிலையங்களும் தனித்தனியாக இயங்குகின்றன.

செந்தூல் கொமுட்டர் நிலையம்தான் செந்தூலில் கட்டப்பட்ட முதல் தொடருந்து போக்குவரத்து நிலையமாகும். செந்தூல் எல்ஆர்டி நிலையம் பின்னர் கட்டப்பட்டது. இந்த நிலையம் நகர்ப்புற மக்களுக்குச் சேவை செய்கிறது. செந்தூல் கொமுட்டர் நிலையம் செந்தூல் புறநகர் மக்களின் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது.

பண்டார் பாரு செந்தூல்

எனவே குழப்பத்தைத் தவிர்க்க, அதிகாரப்பூர்வ தொடருந்து போக்குவரத்து வரைபடத்தில் எல்ஆர்டி நிலையத்திற்கு, செந்தூல் எனும் பெயர் பண்டார் பாரு செந்தூல் என இணைக்கப்பட்டுள்ளது.[4]

முன்னாள் இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) இறுதிக் கட்ட மேம்பாட்டின் ஒரு பகுதியாக 1998-இல் இந்த நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

Remove ads

செந்தூல்

செந்தூல் என்பது கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது செந்தூல் பாராட் (Sentul Barat) மற்றும் செந்தூல் தீமோர் (Sentul Timur) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

செந்தூல் சாலை மற்றும் ஈப்போ சாலை ஆகியவை இப்பகுதிகளுக்குச் சேவை செய்யும் இரண்டு முக்கிய சாலைகள் ஆகும்.

இந்தச் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம், ஒரு பரிமாற்ற நிலையமாக நியமிக்கப்படாவிட்டாலும், இதே  SP1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்திலிருந்து பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடத்தில் உள்ள  KC01  செந்தூல் கொமுட்டர் நிலையம் வரை பயணிகள் நடந்தே செல்லலாம். நடந்து செல்ல ஏறக்குறைய 15 - 20 நிமிடங்கள் பிடிக்கும்.

Remove ads

மேலும் காண்க

செந்தூல் எல்ஆர்டி நிலைய தள அமைப்பு

L2 - இரண்டாவது மாடி பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் ஊனமுற்றவர் அணுகல்
AG/SP தெற்கு திசை (→)  AG18  (தித்திவங்சா நிலையம்)
(→)  SP31  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (தித்திவங்சா)
AG/SP வடக்கு திசை  AG1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம்
 SP1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம்
பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் ஊனமுற்றவர் அணுகல்
L1 - முதலாவது மாடி காத்திருக்கும் இடம் கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, கடைகள் ஊனமுற்றவர் அணுகல்
G - தெருநிலை சாலைவழி நுழைவு/வெளியேறுதல், வாகன நிறுத்தம், பேருந்து நிறுத்தங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஊனமுற்றவர் அணுகல்
Remove ads

காட்சியகம்

செந்தூல் எல்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள்:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads