செந்தூல் கொமுட்டர் நிலையம்
செந்தூல், கோலாலம்பூரில் உள்ள கொமுட்டர் நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செந்தூல் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Sentul Komuter Station; மலாய்: Stesen Sentul Komuter) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஈப்போ சாலைக்கு அருகில் உள்ள பெர்கெந்தியான் சாலையில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். கோலாலம்பூர், செந்தூல் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், முன்பு செந்தூல் தொடருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது.[1]
2015-ஆம் ஆண்டு முதல் இந்த நிலையம், கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையின் சிரம்பான் வழித்தடத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
நீண்ட காலமாக, இந்த நிலையம் செந்தூல்-கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வடக்கு முனையமாக செயல்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கு இரட்டை வழித்தடக் கட்டுமானத்திற்கு (Klang Valley Double Tracking Upgrade) முன்னர், இந்த நிலையம் பத்துமலை-கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் இயங்கி வந்தது.
செந்தூல் கொமுட்டர் நிலையம், செந்தூல் தீமோர் இலகுத் தொடருந்து நிலையத்தில் இருந்து வடமேற்கே 730 மீ தொலைவிலும்; செந்தூல் இலகுத் தொடருந்து நிலையத்தில் இருந்து தென்மேற்கே 900 மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[2]
Remove ads
வடிவமைப்பு
மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து நிறுவனம், செந்தூல் நிலையக் கட்டிடத்தை தொடருந்துகளுக்கான மத்திய பணிமனையாகவும் மற்றும் பண்ட சாலையாகவும் பயன்படுத்தியதில் இருந்து, செந்தூல் கொமுட்டர் நிலையம் இயங்கி வருகிறது.[3]
1989-1995-ஆம் ஆண்டுகளின் கிள்ளான் பள்ளத்தாக்கு தொடருந்து மின்மயமாக்கல் மற்றும் இரட்டைத் தட அமலாக்கத்தின் போதும்; செந்தூல் நிலையக் கட்டிடம் இடித்து மாற்றப்படவில்லை. கேடிஎம் கொமுட்டர் சேவைகளை ஆதரிக்கும் வகையில் செந்தூல் கட்டிடம் தக்கவைக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டது. பின்னர் அந்தக் கட்டிடத்தில் சுழல் நுழைவாயில்கள் சேர்க்கப்பட்டன; கடவுச்சீட்டு வழங்குமிடமும் மேம்படுத்தப்பட்டது.[4]
மரத்தால் கட்டப்பட்ட நிலையம்
மலேசியக் கொமுட்டர் நிலையங்களின் கட்டமைப்பில் மரத்தால் கட்டப்பட்ட ஒரு சில நிலையங்களில் செந்தூல் நிலையமும் ஒன்றாகும். மூன்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்கள்: மற்றும் ஒரு பெரிய பண்ட சாலைக்கு அருகில் அமைந்திருந்தாலும், இந்த நிலையம் ஒரு சாதாரணமான நிலையமாகவே காணப்படுகிறது. வரலாற்றுப் பழைமைத்தனம் பாதுக்காக்கப்பட்ட வேண்டும் என்பதற்காக இந்த நிலையத்தின் அசல்தன்மை அப்படியே உள்ளது.[5]
பயணிகள் காத்திருக்கும் ஓர் அறை; மற்றும் இரண்டு அறைகள் கொண்ட ஓர் அலுவலகம் மட்டுமே பொதுவாக உள்ளன. மற்றபடி, தொடருந்து மின்கருவிகளை இயக்குவதற்கு ஓர் அறையும்; தொடருந்து ஊழியர்களுக்கான ஒரு சிறிய அறையும் உள்ளன.
தீவு நடைமேடை
நிலையத்தின் முதன்மைக் கட்டிடத்திற்கும் தொடருங்கள் பயன்படுத்தும் வழித்தடத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி கொடுக்கப்பட்டு உள்ளது. மின்மயமாக்கல் திட்டத்தின் போது, பழைய நிலையத்தின் ஒரு பக்க நடைமேடை அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக, இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் ஒரு தீவு நடைமேடை கட்டப்பட்டது.
தீவு மேடை நிலையத்தின் முதன்மைத் தளத்தில் இருந்து தென்மேற்கே 70 மீ தொலைவில் உள்ளது. முதன்மைத் தளம் ஒரு நீண்ட பாதுகாப்பான நடைபாதை; மற்றும் மேலடுக்கு பாதசாரிகள் பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் பாலம், தொடருந்து பண்ட சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பண்ட சாலைக்குள் போகாமல் இருக்க பாதசாரிகள் பாலம் பூட்டப்பட்டுள்ளது.
Remove ads
மேலும் காண்க
காட்சியகம்
- பழைய செந்தூல் நிலையம்
- பழைய நிலையத்தின் நடைபாதை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads