சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

From Wikipedia, the free encyclopedia

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Remove ads

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (Chennai Metropolitan Development Authority) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சிக்கான திட்டமிடும் முகாமையாகும்.

Thumb
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் புதிய வரைவுத்திட்டம்
Thumb
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிப் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

வரலாறு

சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் 1972 -ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1974 - ஆம் ஆண்டு, "1971 தமிழ்நாடு நகர வளர்ச்சி மற்றும் திட்டமிடல்" மசோதாவின் படி இன்றியமையா நிறுவனம் என்ற தகுதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் எண், உறுப்பினர் மாண்பு ...
Remove ads

குழுமத்தின் செயல்பாடுகள்

1) சென்னை பெருநகர் பரப்பின் பகுதிகளில் களப்பணியாற்றி, அதன் அடிப்படையில் அறிக்கைகள் அளித்தல்.
2) சென்னை பெருநகர் பரப்பிற்கு வரைவு திட்டம் ஆயத்தம் செய்தல்; விரிவான கட்டமைப்பு திட்டம் ஆயத்தம் செய்தல்; புதிய நகர்களை உருவாக்கும் திட்டங்களை ஆயத்தம் செய்தல்.
3) செயல்பாட்டில் இருக்கும் அண்மைய நிலப்பயன்பாட்டு வரைபடத்தை தயாரித்தல்; புதிய திட்டங்களுக்காக தேவைப்படுகின்ற வரைபடங்களை ஆயத்தம் செய்தல்.
4) புதிய திட்டப்பணிகளை விரைந்து முடித்தல்
5) சென்னை பெருநகர பரப்பின் பகுதிகளில் ஒரு பிரிவு அல்லது முழுமையான பரப்பளவை புதிய நகர் என்று தீர்மானித்து கீழ்கண்ட செயல்பாடுகளை செய்தல்.
- குறிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நகர் படைப்பதர்க்கான வரைவை தயாரித்தல்
- குறிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நகர் உருவாவது புதிய நகர திட்டமிடலின் படி அமைக்கப்படுவதை வரையறை செய்தல்.

குழுமத்தால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

(1) சென்னை புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு
(2) கோயம்பேடு வணிக வளாகம்
(3) வெளி வட்ட சாலை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லைகள் விரிவாக்கம்

20 அக்டோபர் 2022 முடிய சென்னை பெருநகர் திட்டப்பகுதி சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி [ 5 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 179 கிராமங்களை உள்ளடக்கி 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்டிருந்தது.

21 அக்டோபர் 2022 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் படி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகளுடன் 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிவடைகிறது. இதனால் சென்னை மாநகரம் இந்தியாவின் மூன்றாவது பெருநகரம் என்ற தகுதி பெறுகிறது. இந்த விரிவாக்கத்தால் 1,225 கிராமங்கள் கூடுதலாக சேர்ந்துள்ளது.[1] இதன்மூலம் சென்னை பெருநகர மக்கள் தொகை அளவு 1.59 கோடியாக இருக்கும்.[2][3][4]

விரிவாக்கப்படும் சென்னை பெருநகரில், நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரம், திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருத்தணி பகுதிகளில் 1,617 சதுர கிலோ மீட்டரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)வின் கீழ் தற்போது உள்ள 1,189 சதுர கிலோ மீட்டரையும், திட்டமிடப்படாத பகுதிகளான 3,098 சதுர கிலோ மீட்டரும் இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads