தாம்பரம் மாநகராட்சி
இந்தியாவின் தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில், பதினாறாவது பெரிய மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாம்பரம் மாநகராட்சி (Tambaram City Municipal Corporation) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சியை நிறுவ 3 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[1][2][3][4][5] இதன் நிர்வாகத் தலைமையிடம் தாம்பரம் ஆகும்.[6][7]
Remove ads
தாம்பரம் மாநகராட்சி நிறுவுவதற்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்திற்கு 5 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.[8] தற்போதைய மாநகராட்சித் தலைவராக (மேயர்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் க. வசந்தகுமாரி உள்ளார்.[9]
Remove ads
தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள்

நகராட்சிகள்
தாம்பரம் மாநகராட்சி தேர்தல், 2022
2022-ஆம் ஆண்டில் முதன் முதலாக தாம்பரம் மாநகராட்சியின் 70 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 54 வார்டுகளையும், அதிமுக 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். திமுகவின் க. வசந்தகுமாரி மேயராகவும்; கோ. காமராஜ் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.[10]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads