செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம்

கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம்map
Remove ads

செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sri Petaling LRT Station; மலாய்: Stesen LRT Sri Petaling; சீனம்: 大城堡站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]

விரைவான உண்மைகள் SP18 செரி பெட்டாலிங், பொது தகவல்கள் ...

1998-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் (1998 Commonwealth Games) நினைவாக இந்த நிலையம் திறக்கப்பட்டது. கோலாலம்பூர், சாலாக் செலாத்தான் பகுதி வாழ் மக்களுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது.[3]

Remove ads

பொது

செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் முன்பு காமன்வெல்த் நிலையம் (Komanwel station) என்று அழைக்கப்பட்டது.[4]

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.[5]

அமைவு

அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு முன்னரும்; புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையத்திற்கு பின்னரும் செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.

Remove ads

அமைப்பு

L1
பக்க நடைமேடை
நடைமேடை 1 செரி பெட்டாலிங் >>>  AG1   SP1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி;  AG18  அம்பாங் எல்ஆர்டி (→)  AG11   SP11  சான் சோவ் லின் (→)
நடைமேடை 2 செரி பெட்டாலிங் >>>  SP31  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←)
பக்க நடைமேடை
தரை தெருநிலை பயணச்சீட்டு தானியங்கி, தானியங்கி கட்டணக் கடவுகள், வாடிக்கையாளர் சேவை நிலையம், நிலையக் கட்டுப்பாடு,(→) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்
Remove ads

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

பிரசரானா மலேசியா

பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.

எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும்.

எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது.

காட்சியகம்

செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads