சேங்காலிபுரம்
திருவரூர் மாவட்டத்தில், குடவாசல் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேங்காலிபுரம் (Sengalipuram) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், குடவாசல் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமமாகும். சிவகாளிபுரம் என்பது மருவி சேங்காலிபுரம் என பெயர் பெற்றது. திருவாரூர் கும்பகோணம் சாலையில் குடவாசலிலிருந்து 3 கி.மீ தொலைவில் சேங்காலிபுரம் அமைந்துள்ளது.[1]
Remove ads
குறிப்பிடத்தக்கவர்கள்
சேங்காலிபுரம் முத்தண்ணா, அனந்தராம தீட்சிதர்[2] மற்றும் தமிழ் எழுத்தாளர் "திரு" ஆகியோர் சேங்காலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
போக்குவரத்து
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி (150 கி.மீ), அருகிலுள்ள இரயில் நிலையம் கும்பகோணம் (25 கி.மீ), திருவாரூர் (18 கி.மீ)
கோயில்கள்
இவ்வூரில் மூன்று சிவன் கோயில்கள், காளி கோயில், முருகன் கோயில், வரதராசர், பரிமள ரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாளின் திருவடியில் அபூர்வமாக ஆறு விரல்கள் இருக்கின்றன. நாகதோசம், புத்திரதோசம், பித்ரு தோசம், மனகலக்கம், (அபசுமாரம்) வலிப்பு, கலிதோசம் போன்ற ஆறு வகையான இடர்கள் நீங்கும் பொருட்டு நமக்கு அருள்வதாக இங்குள்ள ஆன்றோர்கள், பெரியோர்கள் கூறுகின்றார்கள். தற்போதுள்ள பெருமாள் இருக்கும் இடம் 500 ஆண்டுகளுக்கு முன்பு மண்மேடாகவும், சப்பாத்தி காடகவும் இருந்துள்ளது. ஒரு சித்தபுருசர் அறிவுருத்தலின்பேரில் இந்த இடத்தை தோண்டி பார்க்கையில் ஆதிசேசன்மேல் பள்ளி கொண்ட நிலையில் நன்கு அமர்ந்த நிலையில் சிரிதேவி மற்றும் பூதேவியுடன் சிரிரெங்கநாத பெருமாள் விக்ரகம் கிடைத்துள்ளது. இதை இங்கேயே வைத்து கோயில் அமைத்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. [3]
தத்தாத்ரேயர்: தத்தாத்ரேயரைத் தரிசித்த பிறகு தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பல பக்தர்களால் நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads