சோடியம் பார்மேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோடியம் பார்மேட்டு ( Sodium formate ) என்பது சோடியம் உப்பு பார்மிக் அமிலத்துடன் வினைபுரிந்து உருவாகும் சேர்மம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு HCOONa . பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீர் ஈர்க்கும் தன்மை கொண்டது.
Remove ads
பயன்கள்
துணிகளுக்குச் சாயமிடுதல் மற்றும் அச்சிடும் செயல்முறைகளில் சோடியம் பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது. வலிமையான கனிம அமிலங்களின் அமிலத்தன்மையை அதிகரித்தலில் இடையகப்படுத்தும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு உணவுக் கூட்டுப்பொருளாகவும் பனிநீக்க முகவராகவும் பயனாகிறது.
கட்டமைப்பு உயிரியலில், {[புரதம்|புரதப்]] படிகங்கள் மீதான எக்சு கதிர் சோதனைகளில் ஒரு உறை பாதுகாப்புப் பொருளாக சோடியம் பார்மேட்டைப் பயன்படுத்த முடியும்[1], ஆய்வுகளில் ஏற்படும் கதிரியக்க சேதப் பாதிப்புகளை குறைப்பதற்காக பொதுவாக 100 கெல்வின் வெப்பநிலையில் இவ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன.
Remove ads
தயாரிப்பு
பார்மிக் அமிலத்தை சோடியம் கார்பனேட்டுடன் வினைபுரியச் செய்து நடுநிலையாக்கம் மூலமாக சோடியம் பார்மேட்டு ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது. குளோரோபார்மை அமிலங்கலந்த சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும்
- CHCl3 + 4NaOH → HCOONa + 3NaCl + 2H2O
அல்லது சோடியம் ஐதராக்சைடை குளோரால் ஐதரேட்டுடன் சேர்த்தும் சோடியம் பார்மேட்டைத் தயாரிக்கலாம்.
- C2HCl3(OH)2 + NaOH → CHCl3 + HCOONa + H2O
முதலாவது முறையைக் காட்டிலும் இரண்டாவதாகக் கூறப்பட்ட முறை அதிக அளவில் பயன்படுகிறது. ஏனெனில் குளோரோபார்ம் அமிலக்கரைசலில் குறைவான கரைதிறன் பெற்றுள்ளதால் சோடியம் பார்மேட்டுக் கரைசலில் இருந்து பகுதிப்படிகமாக்கல் முறையில் பிரித்தெடுப்பது எளிதாக இருக்கும். முதலாவது முறையில் உருவாகும் சோடியம் குளோரைடு நன்றாக கரைந்து விடுவதால் பிரித்தெடுப்பது கடினமாக இருக்கும்.
கார்பன் மோனாக்சைடு தகுந்த அழுத்தத்தில் 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்க்கப்பட்டு வணிகமுறையில் சோடியம் பார்மேட்டு தயாரிக்கப்படுகிறது.
- CO + NaOH → HCOONa
எத்தனாலை ஒரு காரத்தின் முன்னிலையில் சோடியம் ஐப்போகுளோரைட்டுடன் ஏலோபார்ம் வினைக்கு உட்படுத்தியும் சோடியம் பார்மேட்டு தயாரிக்கலாம். குளோரோஃபார்ம் தயாரிக்கும் முறையாக இம்முறை சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads


