சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோமநாதீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சந்திரனுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 35.87 மீட்டர் உயரத்தில், (12.945135°N 80.038025°E / 12.945135; 80.038025) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சோமங்கலம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

Thumb
சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில்
சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில்
சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில் (தமிழ்நாடு)

விவரங்கள்

இக்கோயிலின் மூலவர் சோமநாதீசுவரர் மற்றும் தாயார் காமாட்சி அம்மன் ஆவர். கி. பி. 1073இல் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயில் இதுவாகும்.[2]

பெருமை

சரக்கொன்றை மரத்தை தலவிருட்சமாகக் கொண்டு, தேவார வைப்புத் தலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இக்கோயில் தொண்டை மண்டலத்தை சார்ந்த சென்னையின் நவக்கிரகத் தலங்களில் சந்திரன் கிரகத்தின் பெருமையைப் பறைசாற்றும் தலமாகும்.[3]

சிறப்பு

சோழ, பாண்டிய, விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. வழக்கமாக சிவன் கோயில்களில் நந்தி பகவான் சிலை, மூலவர் சன்னதியை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயிலில் இறைவனின் ஆணைப்படி, நந்தி, சோழ மன்னனின் எதிரிகளை துவம்சம் செய்வதற்காக, எதிர்த்திசை நோக்கி அமர்ந்திருந்ததால், அதுவே நிரந்தரமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads