திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி (Sriperumbudur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 29. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்றுள்ளார். ஆன்மீக மகான் ஸ்ரீராமானுஜர் பிறந்த ஊர் என்ற பெருமையும் இதற்கு உண்டு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம் இங்கு அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மிகப்பெரிய தொழில் நகரமாக திகழ்கிறது. இங்கு அந்நிய நாட்டு தொழில் நிறுவனங்கள் பல தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளன. ஹூண்டாய் மற்றும் நிசான் கார் தொழிற்சாலைகள், செயின்ட் கோபெய்ன் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலை, அப்போலோ மற்றும் எம்.ஆர்.எப். டயர் தயாரிக்கும் தொழில் சாலைகள் உள்பட 2500-இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், முதலியார்கள், மற்றும் சில சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
இத்தொகுதியில் சுங்குவார் சத்திரம், குன்றத்தூர், படப்பை, ஒரகடம், வல்லக்கோட்டை போன்ற பெரிய ஊர்கள் உள்ளன. இதை தவிர நிறைய சிறிய கிராமங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி, மாங்காடு பேரூராட்சி, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், மாங்காடு பேரூராட்சியில் 15 வார்டுகளும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளும், குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும் உள்ளன.
அதிமுக சார்பில் கே. பழனி, காங்கிரஸ் சார்பில் கே. செல்வபெருந்தகை, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தணிகை வேல், நாம் தமிழர் கட்சி சார்பில் புஷ்பராஜ், அமமுக சார்பில் மொளச்சூர் ரா. பெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்[2] 2021-இல் இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள்: 3,57,433 அதில் ஆண்கள் 1,74,186, பெண்கள் 1,83,194 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 53 ஆகவுள்ளனர்.[3]
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஸ்ரீபெரும்புதூர் வட்டம் (பகுதி)
வட்டம் பாக்கம்,கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மேவலுர்குப்பம், வளர்புரம், மண்ணூர், கண்டமங்கலம், செங்காடு, சிவபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், காப்பங்கொட்டூர், கோட்டுர், எலிமியான் கோட்டூர், கிளாய், ஆயக்கொளத்தூர், நெமிலி, இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், காட்ரம்பாக்கம், தாராவூர், சிறுகளத்தூர், காவனூர், கொள்ளச்சேரி, நந்தம்பாக்கம், புதுப்பேர், நல்லூர், அமரம்பேடு, பொன்னலூர், சிறுகிளாய், பாடிச்சேரி, எட்டிகுத்திமேடு, குணரம்பாக்கம், எடையார்பக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம், கண்ணன்தாங்கல், வடமங்கலம், பிள்ளையார்பாக்கம், வெங்காடு, இரும்பேடு, சோமங்கலம், பூந்தண்டலம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், எருமையூர், நடுவீரப்பட்டு, புதுச்சேரி, சேத்துப்பட்டு, கருணாகரச்சேரி, கொளத்தூர், நாவலூர், ஒட்டன்கரணை, கடுவஞ்சேரி, போந்தூர், இருங்குளம், மாம்பாக்கம், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், மதுரமங்கலம், சிங்கிலிபாடி, கொடமநல்லூர், மேல்மதுரமங்கலம், கூத்தவாக்கம், சிவன்கூடல், இராமானுஜபுரம், கீரநல்லூர், பொடவூர், நந்திமேடு, சந்தவேலூர், சிறுமங்காடு, ஆரனேரி, வடகால், சிறுகளத்தூர், வளத்தான்சேரி, குண்டுபெரும்பேடு, நல்லாம்பெரும்பேடு, அழகூர், மாகாண்யம், வெள்ளாரை, மலைப்பட்டு, மாகாண்யம் (ஆர்.எப்), மணிமங்கலம், வரதராஜபுரம், கரசங்கால், துண்டல்பழனி, படப்பை, சிறுமாத்தூர், சாலமங்கலம், நரியம்பாக்கம், கூளங்கசேரி, பேரிச்சம்பாக்கம், வைப்பூர், வல்லம், மேட்டுப்பாளையம், எச்சூர், குண்ணம், பாப்பாங்குழி, சேந்தமங்கலம், வீட்டவீடாகை, ஜம்போடை, செல்வழிமங்கலம், பண்ருட்டி, மாத்தூர், பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, காரணைதாங்கல், வஞ்சுவாஞ்சேரி, வெள்ளாரைதாங்கல், ஆரம்பாக்கம், ஆதனஞ்சேரி, கொருக்கன்தாங்கல், ஆதனூர், மாடம்பாக்கம், நீலமங்கலம், ஒரத்தூர், நாவலூர், ஓரகடம், சென்னகுப்பம், பனையூர், எழிச்சூர், பூண்டி, வடக்குப்பட்டு, பாதர்வாடி, வளையங்கரணை, உமையாள்பரனன்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு, சிறுவாஞ்சூர், வடமேல்பாக்கம், ஏரிவாக்கம், கீழ்கழனி, குத்தனூர், காவனூர் மற்றும் கட்டுப்பாக்கம் கிராமங்கள்.
மாங்காடு (பேரூராட்சி), சிக்கராயபுரம் (செசன்ஸ் டவுன்), குன்றத்தூர் (பேரூராட்சி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (பேரூராட்சி). [4]
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- 1977இல் காங்கிரசின் பி. அப்பாவு 8705 (12.89%) & ஜனதாவின் வி. எம்பெருமான் 7953 (11.78%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் சின்னாண்டி 15312 (16.79%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் பழனி 30096 வாக்குகள் பெற்றார்.
Remove ads
வாக்காளர் எண்ணிக்கை
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 514. இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 68 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 76ஆயிரத்து 396 பேர். மூன்றாம் பாலினத்தவர் 50 பேர் உள்ளனர்.
தேர்தல் முடிவுகள்
2021
Remove ads
வாக்குப் பதிவுகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads