சோமநாத சுவாமி கோயில்

சென்னையிலுள்ள ஓர் இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோமநாத சுவாமி கோயில்[1] அல்லது 'சோமநாதீஸ்வரர் திருக்கோயில்'[2] என்றும் அழைக்கப்படும் சிவாலயம், இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில், கொளத்தூர் (சென்னை) பகுதியில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் தொன்மையானது இக்கோயில்.[3] இக்கோயிலின் மூலவர் சோமநாதீஸ்வரர் ஆவார். தாயார் அமுதாம்பிகை ஆவார். இக்கோயிலின் விருட்சம் வில்வம் ஆகும். இக்கோயிலின் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகும். இத்திருத்தலம் அமைந்துள்ள ஊர் முற்காலத்தில் 'திருக்குளந்தை' என்றும் 'திருக்குளத்தூர்' என்றும் அழைக்கப்பட்டு, பின் மருவி, 'கொளத்தூர்' என்று தற்போது அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் சோமேசர் முதுமொழி வெண்பா, குளத்தூர் பதிற்றுப்பத்தந்தாதி, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பாடல் பெற்ற சோமநாத சுவாமி கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 36 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சோமநாத சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 13°07'29.5"N, 80°12'53.9"E (அதாவது, 13.124850°N, 80.214980°E) ஆகும்.

பயன் பெறும் ஊர்கள்

கொளத்தூர், பெரவள்ளூர், பூம்புகார் நகர், செம்பியம், பெரியார் நகர், ஜவஹர் நகர், திரு. வி. க. நகர், பெரம்பூர், அகரம், மாதவரம், பொன்னியம்மன்மேடு, வில்லிவாக்கம் ஆகிய ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள், இத்தொன்மையான கோவிலைக் கண்டு பிரமிக்கின்றனர்.

தல பெருமை

அகத்திய மாமுனிவர் வழிபட்ட தலம் இது.[2] சோமேசர் முதுமொழி வெண்பா, குளத்தூர் பதிற்றுப்பத்தந்தாதி மற்றும் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் ஆகிய பாமாலைகளை, திருவாவடுதுறை ஆதினத்தைச் சார்ந்த, பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த, தவத்திரு மாதவ சிவஞான முனிவர், இக்கோயிலின் தெய்வங்களுக்காக, இயற்றிச் சிறப்பித்த பெருமை இத்தலத்திற்கு உண்டு.[4] 2014ஆம் ஆண்டு, இக்கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

அறநிலையக் கல்லூரி

இக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி ஒன்று ஏற்படுத்த, கட்டடங்கள் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கல்லூரிக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி என்று பெயரிடப்பட்டு, தற்காலிகமாக, இக்கோயில் அமைந்துள்ள கொளத்தூர் பகுதியிலுள்ள எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.[5] 250 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்கல்லூரிக்கு, ஒன்பது உதவிப் பேராசிரியர்கள், ஒரு நூலகர் மற்றும் ஓர் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.[6]

மற்றவை

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமான, சுமார் பத்து கோடி மதிப்புள்ள, சுமார் 7,841 சதுர அடி பரப்பிலான இடம், தனியார் ஒருவருக்கு, தொழில் செய்வதற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், அவர் சுமார் பத்து ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரிடமிருந்து அந்த நிலம் மீட்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads