ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி அல்லது உள்ளூரில் ஜெ.என்.வி. காலாபேட்டை எனப்படுவது உறைவிட இருபாலர் பள்ளியாகும். இது இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள நடுவண் அரசின் கல்வி நிறுவனமாகும். நவோதயா வித்யாலயாக்கள் இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் நடத்தப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது நவோதயா வித்யாலயா ஸ்மிதியால் நிர்வகிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான திறமையான குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயாக்கள் இலவசக் கல்வியை வழங்குகின்றன.[1]

விரைவான உண்மைகள் ஜவஹர் நவோதயா வித்யாலயா, புதுச்சேரி, Jawahar Navodaya Vidyalaya, Puducherry ஜெ.என்.வி. புதுச்சேரி, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இந்த பள்ளி 1986இல் நிறுவப்பட்டது. இது ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் ஒரு நிறுவனமாகும். இந்த பள்ளி நவோதயா வித்யாலயா ஸ்மிதியின் ஹைதராபாத் பகுதி அலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.[2]

சேர்க்கை

ஆறாம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கை ஜே.என்.வி புதுச்சேரியில் நவோதயா வித்யாலயா ஸ்மிட்டி நடத்தும் தேர்வின் மூலம் (ஜே.என்.வி.எஸ்.டி) நடைபெறுகிறது. வித்யல்யா மேலாண்மைக் குழுவின் (வி.எம்.சி) தலைவரான புதுச்சேரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தால் தேர்வு குறித்த தகவல்கள் மாவட்டத்தில் விளம்பரம் செய்யப்படும்.

இணைப்பு

ஜே.என்.வி புதுச்சேரி நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைப்பு எண் 2940001 உடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads