ஜூபிலி மாளிகை, ஐதராபாத்து

From Wikipedia, the free encyclopedia

ஜூபிலி மாளிகை, ஐதராபாத்துmap
Remove ads

ஜூபிலி ஹால் (Jubilee Hall) என்பது 1913 ஆம் ஆண்டில் இந்தியாவின் முந்தைய ஐதராபாத் மாநிலத்தின் நிசாம் மிர் உஸ்மான் அலிகானின் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அரண்மனையாகும். இது ஐதராபாத்தின் கட்டடக்கலை படைப்புகளில் தலைசிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.[1] இது ஐதராபாத்தின் நம்பள்ளியில் அமைந்துள்ளது. [2] இது முன்னர் பாக்-இ-ஆம் என்று அழைக்கப்பட்ட பொது தோட்டங்களின் பச்சை புல்வெளிகளில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் ஜூபிலி மாளிகை, பொதுவான தகவல்கள் ...
Remove ads

வரலாறு

1937 ஆம் ஆண்டில், ஏழாம் நிசாமின் முடிசூட்டு வெள்ளி விழா விழா இங்கு நடைபெற்றது. எனவே இந்த அரண்மனைக்கு இப் பெயர் வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு சிறப்பு நாற்காலி செய்யப்பட்டு அதில் அவரது முகடு பொறிக்கப்பட்டது. நாற்காலி இப்போது புராணி அவேலியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நிசாம் பரிசுகளையும் நினைவுச் சின்னங்களையும் பெற்றார். இந்த பரிசுப்பொருட்களும், ஓவியங்களும் கட்டிடத்தை இன்றும் அலங்கரிக்கின்றன.

Remove ads

கட்டிடக்கலை

Thumb
ஜூபிலி மாளிகை

இந்த மாளிகையை ஜைன் யார் ஜங் என்பவர் வடிவமைத்தார். இந்த கட்டிடம் இந்திய-பாரசீக பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மையத்தில், நிசாமின் கிரீட வடிவ, நிசாமின் சிம்மாசனத்திற்கான சிறிய ஆனால் உயர்ந்த மேடை கட்டப்பட்டது. இது நடுவில் வெள்ளைச் சதுரமாக தெளிவாகத் தெரிகிறது.

மாளிகையின் பிரமாண்டமான செவ்வக மண்டபம், சட்டமன்றம் அதன் தற்போதைய கட்டிடத்திற்குச் செல்வதற்கு முன்பு, 27 ஆண்டுகளாக மாநில சட்டமன்றக் குழு அலுவலகமாக பணியாற்றியது. மாளிகை இப்போது ஒரு மாநில மாநாட்டு மண்டபமாகவும், மாநில அரசாங்க செயல்பாடுகளுக்காகவும் செயல்படுகிறது.

Remove ads

மேலும் காண்க

மேலும் படிக்க

  • Fodor's India By Curtis, William, Fodor, Eugene, 1905-
  • Developments in Administration Under H.E.H. the Nizam VII By Shamim Aleem, M. A. Aleem

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads