ஜெகதீசர் கோவில், உதய்பூர்

இந்துக் கோவில் From Wikipedia, the free encyclopedia

ஜெகதீசர் கோவில், உதய்பூர்map
Remove ads

ஜெகதீசர் கோவில் (Jagdish Temple) என்பது இராசத்தானின் உதயப்பூரின் நடுவில், அரண்மனைக்கு வெளியே உள்ள ஒரு பெரிய இந்துக் கோயிலாகும். 1651 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வருகிறது. ஒரு பெரிய சுற்றுலாத்தலமான இந்தக் கோவில் முதலில் ஜெகந்நாத் ராய் கோவில் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜெகதீஷ்-ஜி என்று அழைக்கப்படுகிறது. இது உதய்பூரில் உள்ள ஒரு முக்கிய நினைவுச் சின்னமாகும்.[1]

விரைவான உண்மைகள் ஜெகதீசர் கோவில், அமைவிடம் ...
Remove ads

கண்ணோட்டம்

Thumb
1949 இல் ஜெகதீசர் கோவில்

ஜெகதீசர் கோயில் உயரமான மொட்டை மாடியில் எழுப்பப்பட்டு 1651 இல் கட்டி முடிக்கப்பட்டது. பிரதான சன்னதியை அடைய, ஒருவர் 32 பளிங்கு படிகளில் ஏற வேண்டும். இறுதியில் கருடனின் பித்தளை உருவத்தால் தாங்கப்பட்ட விஷ்ணுவின் சிலையைக் காணலாம். இது கையால் செதுக்கப்பட்ட கல்லின் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 79 அடி உயரமுள்ள செங்குத்தானதும் மற்றும் உதய்பூரின் மிகப்பெரிய கோயிலுமாகும்.[2]

நகரத்தின் பல சாலைகள் கோவிலை அடைகின்றது. கோவிலில் மிக அழகான நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் தேரோட்டமாகும்.[3] இது 1651 இல் மகாராணா ஜெகத் சிங்கால் கட்டப்பட்டது.[4] ஜெகதீசர் கோவில் மகா மாரு அல்லது மாரு-கூர்ஜரா கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டகும். கோவில் அழகான மற்றும் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் விஷ்ணுவின் அவதாரமான ஜெகந்நாதரின் சிலை உள்ளது. நான்கு கைகள், பூக்கள் மற்றும் நுணுக்கங்களால் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.[5] விநாயகர், சூரியன், சக்தி தேவி மற்றும் சிவன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு சிறிய சன்னதிகளும் இங்குள்ளது. 1651 இல் கட்டிடத்தை கட்டுவதற்கு இந்திய ரூபாய் 1.5 மில்லியன் (அல்லது 1,500,000) ($22023. 21) செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Remove ads

புகைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads