ஜெய்சால்மேர் இல்லம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்சால்மேர் இல்லம் (Jaisalmer House) என்பது புது தில்லியில் உள்ள ஜெய்சால்மேரின் மகாராவாலின் முன்னாள் இல்லமாகும். இது லுடியன்சு மாளிகைப் பகுதியில் உள்ளது.[1]
Remove ads
பயன்பாடு
ஜெய்சால்மேர் இல்லம் இந்திய அரசுக்குச் சொந்தமானது. இது சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் நீதித்துறையின் நிர்வாக தலைமையகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம் இதன் பின்னால் உள்ளது. பாதுகாப்பு துறை இதை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது.
சுற்றுப்புறங்கள்
ஜெய்சால்மேர் மாளிகைக்கு அருகிலுள்ள முக்கியமான கட்டிடங்களில் குடியரசுத் தலைவர் இல்லம், துணைக் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியாவின் வாயில், அகில இந்திய தேசிய காங்கிரசு கட்சி தலைமையகம், பல தூதரகங்கள் அடங்கும். அருகிலுள்ள வானூர்தி நிலையம் சப்தர்ஜங் வானூர்தி நிலையம் ஆகும். ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், கோல்ப் மைதானம், தேசியப் போர் நினைவுச்சின்னம், இந்திய நாடாளுமன்றம், கான் சந்தை மெட்ரோ நிலையம் ஆகியவை அருகில் உள்ளன.
Remove ads
தளம்
இங்குத் தோட்டமும் வாகனம் நிறுத்தும் இடமும் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads