ஜே. கே. சிம்மன்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோனதன் கிம்பிள் சிம்மன்சு (ஆங்கிலம்: Jonathan Kimble Simmons)[2] (பிறப்பு: சனவரி 9, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1986 இல் அறிமுகமானதிலிருந்து 200 க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவரது தலைமுறையின் மிகவும் செழிப்பான மற்றும் நன்கு அறியப்பட்ட குணச்சித்திர நடிகர்களில் ஒருவராவார். அத்துடன் அகாதமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இவர் 2002 முதல் 2007 ஆம் வரை சாம் ரைமி இயக்கத்தில் வெளியான இசுபைடர்-மேன் (2002),[3] இசுபைடர்-மேன் 2 (2004), இசுபைடர்-மேன் 3 (2007)[4] போன்ற மீநாயகன் திரைப்படங்களில் 'ஜே. ஜோனா ஜேம்சன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜூனோ (2007) போன்ற பல திரைப்படங்களிலும், ஜிம் கோர்டன் என்ற கதாபாத்திரத்தில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட ஜஸ்டிஸ் லீக் (2017),[5][6] சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) மற்றும் பேட்கேர்ள் (2022)[7][8] போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பல இயங்குப்பட தொடர்கள், மார்வெல் திரைப் பிரபஞ்ச படங்களான இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019),[9][10] இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021) மற்றும் வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் (2021)[11] உள்ளிட்ட சாம் ரைமி முத்தொகுப்புடன் தொடர்பில்லாத பல்வேறு மார்வெல் ஊடகங்களில் ஜேம்சனாக இவர் மீண்டும் நடித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
