ஜேத்தவனராமயா

இது ஒரு நல்ல கட்டிடம். இலங்கையின் கட்டிட வேலைகளை பிரதிபலிக்கிறது From Wikipedia, the free encyclopedia

ஜேத்தவனராமயாmap
Remove ads

8°21′06″N 80°24′13″E

விரைவான உண்மைகள் ஜேத்தவனராமயா Jetavanaramaya, முந்திய பெயர்கள் ...

ஜேத்தவனராமயா (Jetavanaramaya), இலங்கையின் அனுராதபுரம் நகரத்தின் சிதலமடைந்த ஜேத்தவனத்தின் மகாவிகாரையில் அமைந்த பௌத்த தூபி ஆகும். இது பன்னாட்டு பௌத்த யாத்திரை தலங்களில் ஒன்றாகும்.

சிதிலமடைந்த மகாவிகாரையில், அனுராதபுரத்தின் மன்னர் மகாசேனன் (273–301) கட்டத் துவங்கியத் இத்தூபியை, அவரது மகன் முதலாம் மகாசேனர் கட்டி முடித்தார்.[1].

இப்பௌத்த கட்டிட அமைப்பு, இலங்கையின் தேரவாதம் மற்றும் மகாயானப் பௌத்தப் பிரிவினர்களிடையே இருந்த பிணக்குகளை வெளிப்படுத்துகிறது. இத்தூபி பண்டைய வரலாற்று உலகின் உயரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாக விளங்கியது.[2] பிரமிடு அல்லாத கட்டிடங்களில் எகிப்து நாட்டின் அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்க மண்டபத்திற்கு அடுத்து, இத்தூபி 400 அடி (122 மீட்டர்) உயரம் கொண்டது. இதன் அடிப்பரப்பு 2,33,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] இத்தூபி 93.3 மில்லியன் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.

இதன் வளாகம் 5.6 எக்டேர் பரப்பளவு கொண்டது. இவ்வளாகத்தில் 10,000 பிக்குகள் தங்கி பௌத்தக் கல்வியைப் பயில்கின்றனர்.

Remove ads

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads