ஜொகூர் மிருகக்காட்சிசாலை

From Wikipedia, the free encyclopedia

ஜொகூர் மிருகக்காட்சிசாலைmap
Remove ads

ஜொகூர் விலங்குக் காட்சிச்சாலை (மலாய்: Zoo Johor) என்பது 12.5 எக்டேர் பரப்பில் மலேசியா ஜொகூரில் அமைந்துள்ள விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இங்கு 100-க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கொரில்லா, யானை, பூநாரை, குதிரை மற்றும் சிங்கம் போன்ற 28 விலங்கினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1][2] இது ஜொகூர் பாரு நகர மையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது மலேசியாவில் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரே உயிரியல் பூங்காவாகும்.[3]

விரைவான உண்மைகள் ஜொகூர் விலங்குக் காட்சிச்சாலை Zoo Johor, திறக்கப்படும் தேதி ...

இந்த விலங்குக் காட்சிச்சாலை 1928-ஆம் ஆண்டில் மாட்சிமை தங்கிய மன்னர் சுல்தான் இசுமாயில் இபுராகிம் அவர்களால் திறக்கப்பட்டது. இதற்கு கெபுன் பினாத்தாங் என்று பெயரிடப்பட்டது. இந்த மலாய் சொற்றொடரின் தமிழாக்கம் விலங்கியல் தோட்டம் அல்லது விலங்குக் காட்சிச்சாலை ஆகும். ஏப்ரல் 1, 1962-ல், மிருகக்காட்சிசாலை, ஜொகூர் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது; மற்றும் அதே ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

Remove ads

போக்குவரத்து

விலங்குக் காட்சிச்சாலையை அடைய முபகாத் பேருந்து வழித்தடம் பி-101 மூலம் அணுகலாம். [4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads