ஜோகமாயா தேவி கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோகமாயா தேவி கல்லூரி (Jogamaya Devi College) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமையான[1] மற்றும் முன்னணி பெண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். இது இதே கட்டிடத்தை அசுதோஷ் கல்லூரி (பகல் நேரக் கல்லூரி) மற்றும் சியாமபிரசாத் கல்லூரி (மாலைக் கல்லூரி) ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது. இக்கல்லூரி சர் அசுதோசு முகர்சியின் மனைவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஆகும். இங்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களுக்கான வகுப்புகள் நடைபெறுகிறது. ஜோகமாயா தேவி கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்
- அனன்யா சாட்டர்ஜி, பெங்காலி நடிகை
- பிஜோயா ரே, திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் மனைவி
- இந்திராணி ஹல்தார், பெங்காலி நடிகை
- கருணா பானர்ஜி, நடிகை, தி அபு முத்தொகுப்பு படத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்
- கௌசிகி சக்ரபர்த்தி, இந்தியப் பாரம்பரிய பாடகர்[ மேற்கோள் தேவை ]
- லாக்கெட் சாட்டர்ஜி, நடிகை, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்[3]
- மைத்ரேயி தேவி, கவிஞர், சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
- பவுலோமி கட்டக், மேசைப்பந்தாட்ட வீரர்
- ரேஷ்மி கோஷ், இந்தியப் புவி அழகி 2002
- ரூபா கங்குலி, இந்திய நடிகை, மகாபாரதத்தில் திரௌபதியாக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்
- சௌமிலி பிசுவாசு, பெங்காலி நடிகை
- சுசித்ரா பட்டாச்சார்யா, நாவலாசிரியர்
- சுபர்ணா பத்ரா, பெங்காலி நடிகை
- சதாப்தி ராய், நடிகை, அரசியல்வாதி[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads