ஜோதி (நடிகை)
தென்னிந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோதி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுக்கவிதை, இரயில் பயணங்களில் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.[1][2][3] டி. ராஜேந்தரின் இரயில் பயணங்களில் மற்றும் ரஜினிகாந்த் நடித்த புதுக்கவிதை போன்ற படங்களில் நடித்த ஜோதி நடிப்பில் முத்திரை பதித்தார்.
2007 இல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோயால் ஜோதி இறந்தார். அப்போது ஜோதிக்கு வயது 44 ஆகும். டி ராஜேந்தர் இயக்கிய இவரது முதல் திரைப்படமான "இரயில் பயணங்களில்" படம் வெற்றிப் படமாக ஆனபோது இவர் வெளிச்சத்திற்கு வந்தார். 80 களின் நடுப்பகுதியில் கவிதாலயா தயாரித்த "புதுக்கவிதை" படத்தில் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகருக்கு தமிழ்த் திரைப்பட உலகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
தூர்ப்பு வெல்லே ரெயிலு என்ற படத்தின் வழியாக தெலுங்கு திரையுலகத்திற்கு இவர் அறிமுகமானார்.[சான்று தேவை]
Remove ads
பகுதி திரைப்படவியல்
Remove ads
இறப்பு
மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட இவர், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 18 மே 2007 இரவு, தன் 44 வது வயதில் இறந்தார். விவாகரத்து பெற்ற ஜோதி, தனது மகளுடன் சென்னை புறநகரான நீலகரையில் தங்கியிருந்து இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.[1]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads