காலாட்படை (திரைப்படம்)
2003 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காலாட்படை (Kalatpadai) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். ஜே. ரமேஷ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஜெய் மற்றும் வித்யா வெங்கடேஷ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க ராதாரவி, ஜே லிவிங்ஸ்டன், தலைவாசல் விஜய், நிதின் சத்யா, இராஜசேகர், ஜோதி, தென்னவன், குயிலி ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, சோழா பொன்னுரங்கம் தயாரித்தார். படத்திற்கான இசையை பரத்வாஜ் அமைத்தார். படம் 2003 சனவரி 15 அன்று வெளியானது [1][2][3][4]
Remove ads
நடிகர்கள்
- ஜெய் ராமாக
- வித்யா வெங்கடேஷ் பிரியாவாக
- ராதாரவி ராமின் தந்தை ஜானகிராமனாக
- அருண் ராமின் நன்பன் சிறீதராக
- லிவிங்ஸ்டன் (நடிகர்) "கட்" ராஜாக
- தலைவாசல் விஜய் தீனதயாளனாக
- ஆர். சேகர் பிரியாவின் தந்தையாக
- ஜோதி பிரியாவின் தாய் பாமாவாக
- தென்னவன் பிரியாவின் மாமாவாக
- குயிலி பிரியாவின் அத்தையாக
- ஆண்டனி ராமின் நண்பர் டேனியலாக
- விஜயகணேஷ் ராமின் நண்பராக
- சந்தோஷ் ராமின் நண்பராக
- அமித் குப்தா ராமின் நண்பராக
- ரியாஸ் ராமின் நண்பராக
- சீறீனி ராமின் நண்பராக
- ஜான் பவுல் ஜால் பவுலாக
- சம்பத் ராம் அடியாளாக
Remove ads
தயாரிப்பு
தலைவாசல் (1992), அமராவதி (1993) சாதி சனம் (1997) ஆகிய படங்களைத் தயாரித்த சோழா கிரியேஷன்சின் சோழா பொன்னுரங்கம் படத்தயாரிப்பிலிருந்து நீண்டகாலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் சோழா பொன்னுரங்கம் தனது புதிய படமாக "கலாட்படை" என்ற படத்தைத் தொடங்கினார். இயக்குநர் செல்வாவிடம் பயிற்சி பெற்ற ஜே. ரமேஸ் கூறிய எட்டு நண்பர்களை மையமாகக் கொண்ட ஒரு இளைஞனின் கதை படத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. விமானியின் பயிற்சியை முடித்து, விமான நிறுவனத்தில் பணிபுரியத் தயாராக இருந்த புதுமுகம் ஜெய், நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஏற்கனவே பஞ்சதந்திரம் (2002) படத்தில் விமானப் பணிப்பெண் பாத்திரத்தில் நடித்திருந்த வித்யா வெங்கடேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். துணை நடிகர்களாக அருண் ( நிதின் சத்யா ), விஜயகணேஷ், ஆண்டனி (நையாண்டி தர்பார் புகழ்), லிவிங்ஸ்டன், ராதாரவி, ராஜசேகர், கை தென்னவன், ஜோதி, தலைவாசல் விஜய், குயிலி ஆகியோர் நடித்தனர்.[4]
Remove ads
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடலிசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பரத்வாஜ் அமைத்தார். 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், காமகோடியன், சினேகன், நியூட்டன், ஜே. ரமேஷ் ஆகியோரால் எழுதப்பட்ட ஒன்பது பாடல்கள் உள்ளன.[5][6][7]
வெளியீடு
இந்த படம் முதலில் 2002 நவம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் இது 2003 சனவரி 15க்கு ஒத்திவைக்கப்பட்டது, இது தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி வெளியானது. இப்படம் தூள், சொக்கத்தங்கம், வசீகரா, அன்பே சிவம் உள்ளிட்ட ஆறு படங்களுடன் வெளியானது.[8][9]
வணிகம்
இப்படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[10]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads