டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், சுங்கை பூலோ, டாமன்சாரா டாமாய் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Damansara Damai MRT Station; மலாய்: Stesen MRT Damansara Damai) என்பது மலேசியா, சிலாங்கூர், சுங்கை பூலோ, டாமன்சாரா டாமாய் நகருக்குச் சேவை செய்யும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.[1]
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் முதலாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் இந்த நிலையம் 2022 சூன் 16 அன்று செயல்படத் தொடங்கியது. PY04 சுங்கை பூலோ எம்ஆர்டி நிலையத்திற்கும்; PY06 செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் இந்த நிலையம் அமைந்துள்ளது; மற்றும் இந்த நிலையத்தின் குறியீடு PY05 ஆகும்.[2] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது.[3]
Remove ads
வரலாறு
இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு முன்மொழியப்பட்ட சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம் ஒரு பகுதியாக இருக்கும் என 15 செப்டம்பர் 2016 அன்று எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அந்த வகையில் டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தின் வடக்குப் பகுதியில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையமாக அமைக்கப்பட்டது. இந்த நிலையக் கட்டமைப்பின் கட்டுமானத்திற்கான தொடக்கக்காலக் குறியீடு S05 என அறிவிக்கப்பட்டது.
டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம் எம்ஆர்டி S201 ஒப்பந்தத்தின் (Package S201)[4] கீழ் உள்ளது. இணைப்புவழி, நடைமேடை மற்றும் நிலையக் கதவுகள் உள்ளிட்டவை நிலையக் கட்டமைப்பின் கட்டுமானத்திலும் உள்ளன. 2017-ஆம் ஆண்டில் RM 213.3 மில்லியன் மதிப்பளவிலான நிலையக் கட்டுமானம்; சன்வே கட்டுமான நிறுவனத்திடம் (Sunway Construction Sdn Bhd) வழங்கப்பட்டது. டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானப் பெயர் மேற்கு செரி டாமன்சாரா (Sri Damansara West) ஆகும்.
டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம் சூன் 16, 2022 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது. மேலும் அதே காலக்கட்டத்தில், PY01 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி PY13 கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் நிலையங்களும் செயல்படத் தொடங்கின.[5][6]
Remove ads
புத்ராஜெயா வழித்தடம்
புத்ராஜெயா வழித்தடம் (Putrajaya Line) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும்.
இந்த 12 புத்ராஜெயா வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி; மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது.
Remove ads
நிலைய இருப்பிடம்
இந்த நிலையம் ஓர் உயர்மட்ட நிலையமாகும். தரை மட்டத்திலிருந்து இரண்டு நிலைகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டது. முதல் நிலை இணைப்புவழி தளமாகும்; இரண்டாம் நிலை மேல் தளத்தில் இரட்டை வழித்தடங்களும்; இரண்டு நடைமேடைகளும் உள்ளன. இந்த நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் வடக்கு பொருளாதார மண்டலமான டாமன்சாரா டாமாய் பகுதியின் கோலா சிலாங்கூர்-கெப்போங் சாலையில் அமைந்துள்ளது.
டாமன்சாரா டாமாய், சவுஜானா டாமன்சாரா (Saujana Damansara), பிரைமா டாமன்சாரா (Prima Damansara), கம்போங் தேசா அமான், தாமான் மனோர், சியராமாஸ், சுத்திரா டாமன்சாரா (Sutera Damansara) ஆகிய நகர்ப்பகுதிகளுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது.
L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
நடைமேடை 2 12 புத்ராஜெயா (→) குவாசா டாமன்சாரா PY01 (→) | ||
நடைமேடை 1 12 புத்ராஜெயா (→) புத்ராஜெயா சென்ட்ரல் PY41 (←) | ||
பக்க நடைமேடை | ||
L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், நுழைவாயில், தரை மட்டத்திற்கு நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் (→) படிக்கட்டுகள். |
G | தரை மட்டம் | வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம், பணியாளர்களின் வாகனங்கள் நிறுத்துமிடம், ஊட்டி பேருந்து முனையம் (→) நுழைவாயில் B |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
Remove ads
பேருந்து சேவைகள்
Remove ads
காட்சியகம்
டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2022):
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads