டாமன்சாரா பெர்டானா
பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்பு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாமன்சாரா பெர்டானா (மலாய்: Damansara Perdana; ஆங்கிலம்: Damansara Perdana); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். கோலாலம்பூர் மாநகருக்கு மிக அருகாமையில் உள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதிக்கு அருகில் பண்டார் உத்தாமா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், முத்தியாரா டாமன்சாரா; டாமன்சாரா ஜெயா; பண்டார் ஸ்ரீ டாமன்சாரா ஆகிய புறநகர்ப் பகுதிகள் உள்ளன. 1996-ஆம் ஆண்டில் இந்த புறநகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது.
RM 1.9 பில்லியன் மொத்த கட்டுமான மதிப்பைக் கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு
டாமன்சாரா பெர்டானா முன்பு ஒரு ஓராங் அஸ்லி கிராமமாக இருந்தது. மேம்பாட்டு நிறுவனமான எம்கே லேண்ட் சவுசானா டிரைங்கல் (MK Land Saujana Triangle) அந்தக் கிராமத்தின் பெரும்பகுதியை விலை கொடுத்து வாங்கியது.[1]
பின்னர் 1996-இல் அதை அபிவிருத்தி செய்யத் தொடங்கியது. அதன் பின்னர், டாமன்சாரா பெர்டானா பெட்டாலிங் ஜெயாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.[2]
அமைவு
டாமன்சாரா பெர்டானா 750 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெட்டாலிங் ஜெயாவின் தங்க முக்கோணத்திற்குள் (Golden Triangle of Petaling Jaya) அமைந்துள்ளது. டாமன்சாரா பெர்டானா நகர்ப் பகுதியை எளிதில் அணுகுவதற்குச் சிறந்த நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் உள்ளன. அவையாவன:
டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலை (Damansara–Puchong Expressway - LDP);
இஸ்பிரிண்ட் விரைவுச்சாலை (Sprint Expressway - SPRINT);
Remove ads
வணிக வளாகம்
டாமன்சாரா பெர்டானாவில் பிரபலமான வணிக நிறுவனங்கள் தங்களின் வணிக மையங்களை அமைத்துள்ளன.
- 1 உத்தாமா - 1 Utama
- இக்கியா - IKEA
- தி கர்வ் - The Curve
- தெசுகோ - Tesco
- கத்தே சினிலெய்சர் - Cathay Cineleisure
- தி பிலேஸ் - The Place
- பெர்டானா வர்த்தக மையம் - Perdana Trade Centre
குடியிருப்புகள்
டாமன்சாரா பெர்டானாவில் உள்ள குடியிருப்பு பகுதிகள்:
- பெர்டானா எமரால்டு காண்டோமினியம் - Perdana Emerald Condo
- பெர்டானா வியூ காண்டோமினியம் - Perdana View Condo
- புளோரா டாமன்சாரா - Flora Damansara
- பெர்டானா பிரத்தியேக காண்டோமினியம் - Perdana Exclusive Condo
- ரிட்சு பெர்டானா 1 - Ritze Perdana 1
- பெருநகர சதுக்கம் - Metropolitan square
- அர்மானி தெரெஸ் I- Armanee Terrace I
- PJ வர்த்தக மையம் - PJ Trade Center
- அர்மானி தெரெஸ் 2 - Armanee Terrace 2
- ரிட்சு பெர்டானா 2 - Ritze Perdana 2
- ரபலேசியா - Rafflesia
- எம்பயர் குடியிருப்பு - Empire Residence
- நியோ டமன்சாரா குடியிருப்பு - Neo Damansara Residence
- பாயிண்ட் 92 - Point 92
- எம்பயர் டாமன்சாரா - Empire Damansara
- எம்பயர் சிட்டி - Empire City
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads