டெக்னோபார்க், திருவனந்தபுரம்

From Wikipedia, the free encyclopedia

டெக்னோபார்க், திருவனந்தபுரம்map
Remove ads

டெக்னோபார்க் என்னும் தொழில் நுட்பத் திடல், திருவனந்தபுரத்தில் உள்ளது. பரப்பளவின் அடிப்படையில், இந்தியாவின் பெரிய தொழில் நுட்பப் பூங்காவாக விளங்குகிறது.[1] இங்கு ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. இது 1990-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நான்கு மில்லியன்/ நாற்பதாயிரம் சதுர அடி நிலப்பரப்பில் கட்டிடங்களைக் கொண்டுள்ளது. இங்கு 285 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் நாற்பதாயிரம் பேர் பணிபுரிகின்றனர்.[2]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Thumb
டெக்னோபார்க்கின் முதல் பகுதி - வான்வழிப் பார்வை
Remove ads

கட்டிடங்கள்

மேலதிகத் தகவல்கள் பெயர், தளங்களின் எண்ணிக்கை ...

வசதிகள்

விருந்தினர் அறை, கடைகள், வங்கிகள், ஏ.டி.எம் இயந்திரங்கள், உணவகங்கள், கருத்தரங்க அறைகள் உள்ளிட்டவையும் உள்ளன.

Remove ads

பண்பாடு

Thumb
டெக்-எ-பிரேக் விழா

உலகிலேயே பசுமையான வளாகத்தைக் கொண்ட தொழில் நுட்பத் திடல்களில் இதுவும் ஒன்று.[10]

இந்திய நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, ஜப்பான், ஜனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இருக்கின்றன. இங்கு வெவ்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

டெக்னோபார்க் கிளப்

இந்த திடலின் முதல் கட்டிடத்தில் உள்ள கிளப்பில் பல வசதிகள் உள்ளன.[11] உடற்பயிற்சியகம், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கங்கள் ஆகியன உள்ளன. இவை தவிர, உணவகங்களும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கடைகளும் உள்ளன.[11]

டெக்னோபார்க் அட்வென்சர் கிளப்

இங்குள்ள டெக்னோபார்க் அட்வென்சர் கிளப்பில் ஊழியர்களுக்கான மனமகிழ் வசதிகள் உள்ளன. இந்த அமைப்பின் மூலம், ஊழியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் வெளியூர்களுக்கு சென்று வரலாம். அவர்கள் மலையேறவும், பிற ஊர்களில் தங்கியிருந்து ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.[12]

டெக்-எ-பிரேக்

இங்கு டெக்-எ-பிரேக் என்னும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறும்.[13] இது ஒரு வார காலத்திற்கு நடத்தப்படும். புகழ் பெற்ற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகளும் உண்டு.[14]

Remove ads

முக்கியத்துவம்

இதனால் கேரள அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது.[15][16] இங்கு முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதனால் திருவனந்தபுரத்தின் வளர்ச்சி மேலோங்கியிருக்கிறது. இங்குள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையால், கடைகள், போக்குவரத்து வசதிகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை அதிக வருமானத்தைப் பெறுகின்றன.

இங்கிருந்து பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, திருவனந்தபுரம் விமான நிலையத்தை அணுகலாம்.

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads