தங்கல் (திரைப்படம்)
2016 இந்தித்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கல் (Dangal ([Wrestling competition] Error: {{Lang-xx}}: text has italic markup (help)) என்பது 2016 ஆண்டைய இந்திய இந்தி-மொழி தன்வரலாற்று விளையாட்டுத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை நித்திஷ் திவாரி இயக்கியுள்ளார். இப்படத்தில் மகாவீர் சிங் போகாட்டாக ஆமிர் கான் நடித்துள்ளார்,[4][5] மகாவீர் சிங் போகாட் தன் இரண்டு மகள்களான கீதா போகாட் மற்றும் பபிதா குமாரி ஆகியோருக்கு மற்போர் கற்றுக் கொடுத்தார்.[6][7][8] கீதா போகாட் இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரர் ஆவார், இவர் 2010 பொதுநலவய விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்றார். (55 கிலோ கிராம்). இவரது சகோதரி பபிதா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார் (51 கிலோ கிராம்). "தங்கல்" என்ற இந்தி சொல்லுக்கு பொருள் "மற்போர் போட்டி" என்பதாகும்.
தங்கல் படத்திற்கு பிரீதம் இசையமைத்துள்ளார், பாடல்களுக்கு வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். இந்திய மகளிர் மல்யுத்த அணியின் பயிற்சியாளரான, கிருபா ஷங்கர் பிஷ்னாயின் என்பவர் மற்போர் காட்சிகளுக்காக அமீர் கான் மற்றும் படக் குழுவினருக்கு பயிற்சி அளித்தார்.[9]
Remove ads
கதை
அரியானா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் (ஆமிர் கான்). அவருடைய மனைவி தயா (சாக்ஷி தன்வர்). மகாவீருக்கு மற்போர் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பது கனவு. ஆனால், அவருக்கு அடுத்தடுத்துப் பெண்களே பிறப்பதால் அந்தக் கனவை ஒரங்கட்டிவைக்கிறார்.
ஆனால், தன்னுடைய சண்டையிடும் திறன் தன் மகள்கள் கீதாவுக்கும் (ஜாய்ரா வசீம் / ஃபாத்திமா சனா ஷேக்), பபிதாவுக்கும் (சுஹானி பட்நாகர் / சன்யா மல்ஹோத்ரா) இயல்பாக இருப்பதைத் தற்செயலாக உணரும் மகாவீருக்கு மீண்டும் அந்தக் கனவின் மீதான நம்பிக்கைத் துளிர்விடுகிறது. கிராமத்தினரின் ஏளனப் பேச்சுகளையும் பார்வைகளையும் புறந்தள்ளி அவர் தன் மகள்களுக்கு மற்போர் பயிற்சி கொடுக்கிறார். அவர்களின் பயிற்சிக்காக ஆண்களுடனும் மற்போர் போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார். மகாவீரின் தங்கப் பதக்கக் கனவு அவருடைய மகள்களால் எப்படி நனவாகிறது என்பதுதான் கதை.
Remove ads
வெளியீடு
இப்படம் உலக அளவில் 2016 திசம்பர் 23 அன்று வெளியிடப்பட்டது,[10] தங்கல் படத்திற்கு உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம், அரியானா, சத்தீசுகர், தில்லி, மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு இந்திய மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு, பெண் கல்வி, கருவில் பெண் சிசுக்களைக் கொல்லுதல் போன்றவற்றைக் குறித்து இந்தியாவில் சமூக பிரச்சாரத்தை ஊக்குவிக்க அரசுகள் இந்த வரிவலக்கை அளித்தன.[11][12][13][14][15][16] தங்கல் படம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழி மாற்றுப் படமாக வெளியிடப்பட்டது.[17][18] 62வது பிலிம் பேர் விருதுகளில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர்(திவாரி), சிறந்த சண்டை பயிற்சியாளர் (ஷியாம்), சிறந்த நடிகர் (கான்) ஆகிய நின்கு விருதுகளை தங்கல் பெற்றது.நான்கு விருதுகளை வென்றது.[19]
Remove ads
வரவேற்பு
தங்கல் இந்தி திரையுலகில் உள்நாட்டில் அதிகப்பட்ச வசூலை ஈட்டியது,[20] மற்றும் இதுவரை வெளிநாடுகளில் வெளியான இந்தியப் படங்களில் அதிகப்படியான வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடமாக ₹ 741,08 கோடி (அமெரிக்க $ 110 மில்லியன்) உலகளாவிய வருவாய் ஈட்டியது ₹741.08 கோடி (ஐஅ$87 மில்லியன்).[21]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
