தஞ்சோங் பெலப்பாஸ்

இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு துறைமுகம் From Wikipedia, the free encyclopedia

தஞ்சோங் பெலப்பாஸ்map
Remove ads

தஞ்சோங் பெலப்பாஸ் (UN/Locode: MYTPP) (மலாய்: Pelabuhan Tanjung Pelepas; ஆங்கிலம்: Port of Tanjung Pelepas); (சுருக்கம்: PTP) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொள்கலன் (Container Port) துறைமுகம் ஆகும். ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது துறைமுகம்.

விரைவான உண்மைகள் தஞ்சோங் பெலப்பாஸ் Port of Tanjung Pelepas தஞ்சோங் பெலப்பாஸ்மலேசியாவில் அமைவிடம், அமைவிடம் ...

குளோபல் தெர்மினல் நெட்வொர்க் (Global Terminal Network) எனும் உலகளாவிய கொள்கலன் முனைய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்தத் துறைமுகத்தின் முனையங்கள் உள்ளன. இருப்பினும் எம்.எம்.சி. (MMC Corporation Berhad) என்று அழைக்கப்படும் கொள்கலன் முனைய நிறுவனம், இந்தத் துறைமுக முதலீட்டில் 70 விழுக்காடு கொண்டுள்ளது.[2]

Remove ads

பொது

தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் உள்ள சில முனையங்களை ஏபிஎம் தெர்மினல் (APM Terminals) என்று அழைக்கிறார்கள். ஏபி மோலர் மார்சுக் (A.P. Moller-Maersk) எனும் டச்சு நாட்டு நிறுவனம் 30 விழுக்காடு முதலீடு செய்துள்ளது.

இந்தத் துறைமுகம் மலேசியாவின் தென்மேற்கு ஜொகூரில் உள்ள பூலாய் ஆற்றின் கிழக்கு முகப்பில் ஜொகூர் நீரிணைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீரிணை என்பது மலேசியாவையும் சிங்கப்பூசிங்கப்பூரையும் பிரிக்கும் நீர்ப்பகுதி ஆகும். சிங்கப்பூர் துறைமுகங்களுடன் போட்டியிடும் முயற்சியில் இந்தத் துறைமுகம் கட்டப்பட்டது.[3]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads