தன்னாட்சி இயக்கம் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தன்னாட்சி இயக்கம் (இந்தியா)
Remove ads

இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் (Indian Home Rule movement), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களையும், ஆட்சிப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களுக்கு பதிலாக இந்தியர்களின் தன்னாட்சியுடன் கூடிய அரசுகள் நிர்வகிப்பதை வலியுறுத்தும் இயக்கமாகும்.[1][2]

Thumb
இந்திய தன்னாட்சி இயக்கத்தின் கொடி

பம்பாய் மாகாணத்தின் பெல்கமில் நடைபெற்ற மாநாட்டின் போது ஏப்ரல், 1916 அன்று இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான பால கங்காதர திலகர், எஸ். சுப்பிரமணிய அய்யர், சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசண்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் இவ்வியக்கம் நிறுவப்பட்டது.[3]

துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் அகில இந்திய முசுலிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்களால் ஈர்க்கப்பட்ட இவ்வியக்கம் ஈர்க்கப்பட்டது. இவ்வியக்கம் மேற்கொண்ட 1916-ஆம் ஆண்டு லக்னோ உடன்படிக்கையின் படி, இந்தியத் தீவிரவாத தேசிய மற்றும் மிதவாத தேசியவாதத் தலைவர்களை ஒன்றிணைத்தது.

இதனால் பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த மக்கள் போராட்டங்களால், பிரித்தானிய அரசு அன்னி பெசன்ட்டை கைது செய்தது. போராட்டங்களை தணிக்க வேண்டி பிரித்தானிய அர்சு மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றி, சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. [4] 1921ல் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்துக் குழுக்கள் அமைக்கப்பட்டது. 1920-இல் இவ்வியக்கத்தின் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வியக்கத்தின் மைய நோக்கங்கள் நிறைவேறியதால், இந்திய விடுதலை இயக்கத்தில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது. எனவே இவ்வியக்கம் தானாக செயல் இழந்து . தேசியத் தலைவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் கவனம் செலுத்தினர். எனவே 1921-இல் தன்னாட்சி இயக்கத்தின் பெயர், சுயராச்சிய சபை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[5]

Remove ads

அடிக்குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads