தம்புன் குகை ஓவியங்கள்
ஈப்போ, தம்புன், குனோங் பாஞ்சாங் சுண்ணாம்பு மலைக் குகையில் உள்ள குகை ஓவியங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தம்புன் குகை ஓவியங்கள் (மலாய்: Lukisan Gua Tambun; ஆங்கிலம்: Tambun Rock Art) என்பது மலேசியா, பேராக், ஈப்போ, தம்பூன், குனோங் பாஞ்சாங் (Gunung Panjang) சுண்ணாம்பு மலைக் குகையில் உள்ள குகை ஓவியங்கள் ஆகும். புதிய கற்காலத்தில் (Neolithic Era) வரையப்பட்ட ஓவியங்கள் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.[2]
இந்த ஓவியங்கள் ஓராங் அஸ்லி மக்களின் மூதாதையர்களால் வரையப்பட்டு இருக்கலாம் என்றும்; ஆவை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கருதப் படுகின்றன[3]
1959-ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியாரின் 6-ஆவது கூர்க்கா ரைபிள்ஸ் 2-ஆவது பிரிவில் இருந்த இராணுவ அதிகாரி ராவ்லிங்ஸ் (2/Lt R. L. Rawlings of the 2nd Battalion, 6th Queen Elizabeth's Own Gurkha Rifles) என்பவரால் இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.[4]
Remove ads
பொது
தம்பூன் குகை ஓவியங்கள் வரையப்பட்டு உள்ள தம்பூன் பாறைக் கல்லானது; குனோங் பாஞ்சாங் சுண்ணாம்பு மலையின் மேற்குப் பகுதியில், ஒரு முக்கியமான பாறையின் மீது வரையப்பட்டு உள்ளது. குனோங் பாஞ்சாங் மலை, சுண்ணாம்பு பாறைக் கற்களாலான (Karstic Stones) ஒரு பெரிய சுண்ணக்கல் மலை ஆகும்.
குனோங் பாஞ்சாங் மலை, கிந்தா பள்ளத்தாக்கில் ஈப்போ நகரை நோக்கியவாறு உள்ளது. அதே சமயத்தில் அந்த மலையின் உள்ளே இருக்கும் குகை, கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
குனோங் பாஞ்சாங் மலையானது, டெவோனியன் (Devonian) காலத்துச் சுண்ணாம்புக் கல்லைச் சேர்ந்த வெளிர் சாம்பல் பளிங்குக் கல்லைக் கொண்டுள்ளது.[5]
Remove ads
விளக்கம்
தம்புன் பாறைக் கலைத் தளம், ஆசியாவிலேயே வரலாற்றுக்கு முந்தைய கற்கால ஓவியங்களின் மிகப்பெரிய காட்சிப் பொருளாக விளங்குகிறது. அந்த ஓவியங்கள் 2,000 முதல் 12,000 ஆண்டுகள் பழமையானவை என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.[6]
இந்த ஓவியங்கள் எமாடைட் (Hematite) எனும் இரும்பு உயிரகைக் கனிப்பொருள் பயன்படுத்தி வரையப்பட்டு இருக்கலாம். கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், பாறையின் அடிப் பகுதியில் கூம்பு வடிவ நத்தை ஓடுகள் சிதறிக் கிடந்தன. அவற்றின் நுனிகள் உடைபட்டு இருந்தன.[2]
குகைப் பாதையில் சேறும் சகதியும் படர்ந்து இருப்பதாலும், செங்குத்தான படிக்கட்டுகள் இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது.[7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads