தயோகந்தக அமிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தயோகந்தக அமிலம் (Thiosulfuric acid) என்பது கந்தகத்தின் ஆக்சோ அமிலம் ஆகும். தயோசல்பேட்டு உப்பைக் கொண்டு இந்த அமிலத்தை அமிலத்தன்மையுள்ள நீர்த்த கரைசலாக உருவாக்க முடியாது. ஏனெனில் தயோகந்தக அமிலம் நீரில் எளிதாக சிதைவடைந்து விடுகிறது. சில மிகச்சரியான வினை நிபந்தனைகளின் அடிப்படையில் சிதைவடையும் வினையில் பல்வேறு வேதிப் பொருட்கள் சிதைவு விளைபொருளாக உருவாகின்றன. கந்தகம், கந்தக டை ஆக்சைடு, ஐதரசன் சல்பைடு, பாலிசல்பேன்கள், கந்தக அமிலம் உள்ளிட்டவை இச்சிதைவு விளைபொர்ட்களாகும் [2]. நீரற்ற முறைகளில் தயோகந்தக அமிலத்தை சிகிமித்டு உற்பத்தி செய்தார் :[2][3]
- H2S + SO3 → H2S2O3•nEt2O (டை எத்தில் ஈதரில் −78 °செ இல்)
- Na2S2O3 + 2HCl → 2NaCl + H2S2O3•2Et2O (டை எத்தில் ஈதரில் −78 °செ இல்)
- HSO3Cl + H2S → HCl + H2S2O3 (தாழ் வெப்பநிலை)
நீரற்ற தயோகந்தக அமிலம் 0 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழாகவும் சிதைவடைகிறது.
- H2S2O3 → H2S + SO3
ஆர்ட்ரீ-ஃபாக்/ஏபி இனிசியோ கணக்கிடுகளின் அடிப்படையில் S- அமில மாற்றியன் O- அமில மாற்றியனைவிட அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுவதாக கருதப்படுகிறது [4]. இவற்றைத்தவிர ஐதரசன் சல்பைடு மற்றும் கந்தக மூவாக்சைடு சேர்ந்து உருவாகும் கூட்டுவிளை பொருள் (H2S•SO3,) , வெண்மை நிறத்திலான படிகத்திண்மம் ஒரு மாற்றியனாகும். இதையும் தாழ் வெப்பநிலையில் தயாரிக்கிறார்கள்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads