தர்மசாலா கோயில்

கருநாடகாவில் உள்ள கோவில் From Wikipedia, the free encyclopedia

தர்மசாலா கோயில்map
Remove ads

தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் (Dharmasthala Temple) (கன்னடம்/துளு:ಶ್ರೀ ಕ್ಷೇತ್ರ ಧರ್ಮಸ್ಥಳ) (சமக்கிருதம்: क्षेत्र धर्मस्थल), 800 ஆண்டு பழமையான[1] மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோயில் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா எனும் ஊரில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தர்மசாலா கோயில், பெயர் ...

இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.[2]

தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை சமண சமய வீரமன்னா பெர்கடே என்பவரின் வழிவந்த குடும்பத்தினர் மேற்பார்வையிடுகின்றனர். ஆனால் கோயில் பூசைகளை மத்வரின் துவைத மரபை பின்பற்றும் வைண அந்தணர்கள் கோயில் பூசைகள் செய்கின்றனர்.

Remove ads

வரலாறு

Thumb
பகவான் பாகுபலியின் சிலை, தர்மஸ்தலா

800 ஆண்டுகளுக்கு முன்னர் குடுமா கிராமத்தில் (தற்கால தர்மஸ்தலா) வாழ்ந்த சமணரான வீரமன்னா பெர்கடே என்பவரின் கனவில் தோன்றிய தர்மதேவதை, இத்தலத்தில் மஞ்சுநாதர், சந்திரபிரபா, குமாரசுவாமி மற்றும் கன்னியாகுமரி தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுவி வழிபடச் சொன்னார். அதன் படியே வீரமன்னா பெர்கடேயும் நான்கு தெய்வங்களுக்கும் சன்னதிகள் எழுப்பி வழிபட்டார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads