தவம் (திரைப்படம்)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தவம் (ஆங்கிலம் : Thavam) 2007 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் சக்தி பரமேசு, பூரி ஜெகன்நாத் கதை எழுதினார்.. மேலும் இப்படத்தை அர்ஜுன் தயாரித்திருந்தார். அவரும் இந்தப் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் "இட்லு ஸ்ரவாணி சுப்பிரமணியம்" என்ற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கமாகும். இப்படத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் வந்தன குப்தா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் வடிவேலு (நடிகர்), சனகராஜ்,மற்றும் கலைராணி (நடிகை) ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2007 அக்டோபர் 5 அன்று வெளியானது. ஆனாலும் இப்படம் ஒருத் தோல்விப் படமாகவே முடிந்தது.
Remove ads
கதை
சுமதி (வந்தனா குப்தா) மற்றும் சுப்பிரமணியம் (அருண் விஜய்) ஆகிய இருவரும் சென்னையில் ஒரு இடத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இடத்தில் இத்திரப்படம் தொடங்குகிறது. இருவரும் அங்கே சந்திக்கிறார்கள். தங்கள் குறிக்கோள் ஒன்றுதான் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். தற்கொலை முடிவு செய்கின்றனர். சுமதி தற்கொலை முயற்சி செய்ய தீவிரமாக இருப்பதற்கு அவளது மோசமான உறவினர்கள் காரணம்.ஆவர் அவளுடைய பாதுகாவலர்களும் அவளுடைய இறப்பிற்குப் பிறகு அவளது பணத்தை அடைய எண்ணுகின்றனர். துபாயில் வேலை வாங்கித் தருவதாக சுப்ரமணியத்திடமிருந்து க்குச் சென்று தங்கள் வாழ்க்கையை முடிக்கும் முயற்சியில் தூக்க மாத்திரைகளை உட்கொள்கின்றனர். இருப்பினும், அவர்கள் வீட்டு உரிமையாளர் மணியால் (சனகராஜ்) மீட்கப்படுகிறார்கள். வாழ்க்கை ஒரு திருப்பத்தை தருகிறது, சுப்பிரமணியம் ஒரு நல்ல வேலையில் சேருகிறார். அதே நேரத்தில் சுமதியின் உறவினர்கள் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். சுப்பிரமணியத்தின் திருமணம் அவரது தாயின் விருப்பப்படி ஒரு பெண்ணுடன் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. சுமதியின் திருமணம் அவளது மாமாவுடன் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் திருமண நாளில் இருவரும் அந்தந்த திருமண மண்டபங்களை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் எவ்வாறு மீண்டும் ஒன்றிணைகின்றனர் என்பது இத்திரைப்படத்தின் மீதிக் கதையாகும்.
Remove ads
நடிகர்கள்
சுப்ரமணியமாக அருண் விஜய்
சுமதியாக வந்தணா குப்தா
அர்பிதா
கீரிபுள்ளையாக வடிவேலு (நடிகர்)
மணியாக சனகராஜ்
கலைராணி (நடிகை)
வெண்ணிற ஆடை மூர்த்தி
மதன் பாப்
அர்ஜுன் சிறப்புத் தோற்றத்தில்
ஒலிப்பதிவு
இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.[1][2]
எண் | பாடல் | பாடியோர் | எழுதியோர் |
1 | எங்க ஊரு | ஜெய். ஃபிரான்கோ | எஸ். முத்தழகன் |
2 | கண்ணதாசா | மகாலட்சுமி ஐயர் | தபு சங்கர் |
3 | கண்ணதாசா (இமான் பதிப்பு ) | சுதா ரகுநாதன், மகாலட்சுமி ஐயர் | |
4 | மக்குபையா | பிரியா சுப்ரமணியம் , அனந்து | |
5 | மீனுக்குட்டி | ஆதர்சு, ஹரிணி | |
6 | சண்டக்கோழி | ஜோஸ்டான ராதாகிருஷ்ணன், நவீன் |
விமர்சனங்கள்
இந்தியகில்ட்ஸ் இது "இளைஞர்களுக்கான தென்றலான காதல் கதை." என்று எழுதியது[3] பிஹைன்ட்உட்ஸ் "எதிர்பார்த்த பாதையில் தொடக்கத்திலிருந்தே ஒரே காட்சிகள் இருப்பதால், படத்துடன் ஈடுபடுவது கடினம். கதையில் ஆழம் இல்லை, திரைக்கதை மற்றும் கதை பலவீனமானது மற்றும் பரிதாபகரமானது." என்று எழுதியது.[4] ரீடிப் என்ற இணையம் "அறிமுக இயக்குநர் சக்தி பரமேஷ் ஒரு கெடுதலும் கொடுக்காதது போல் இயக்குகிறார். பார்வையாளர்கள் குறைவான மகிழ்ச்சியை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். அதனால் கதை மற்றும் உரையாடல் ஆகியவை மனதில் ஒட்டாமல் போய்விட்டது" என்று எழுதியது [5]
Remove ads
மரபுரிமை
2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில், படத்திலிருந்து "ஆஹா" என்ற சொல் பேஸ்புக்கில் மூலம் பல தமிழ் மக்களிடையே அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தையை வடிவேலு ஒரு பேருந்து நிறுத்தத்தில் அவரும் அருண் விஜயும் சம்பந்தப்பட்ட ஒரு நகைச்சுவை காட்சியில் பேசினார். இந்த வரியை அவர் சொல்லும்போதிருந்த தொனியின் காரணமாகவும், இந்த வரியை அவர் தனது தொழில் வாழ்க்கையில் அடிக்கடி வெவ்வேறு தொனிகளுடன் கூறியிருப்பதாகவும் நம்பப்படுகிறது, இது ஒரு ரசிகர்களுக்கு பிடித்த மேற்கோள் சொல்லாகிவிட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads