தாண்டிக்குடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாண்டிக்குடி (ஆங்கிலம்:Thandikudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்[3][4]. மேற்குத்தொடர்ச்சி மலையான பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3705 அடி உயரத்தில் கொடைக்கானலிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியாக திகழ்கிறது
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4058 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாண்டிக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாண்டிக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கிய பயிர்
இந்த மலைக் கிராமத்தில் காபி, வாழை, பலா, மிளகு, ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைகின்றன.
வெளி இணைப்பு
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads