தார்ச்சுலா-லிபுலேக் சாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தார்ச்சுலா-லிபுலேக் சாலை (Dharchula-Lipulekh road), இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தின் பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா சிற்றூரையும், இந்தியா-திபெத் (சீனா) எல்லையைப் பிரிக்கும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்த லிபுலேக் கணவாயை இணைக்கும் 80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலை ஆகும். இதனை கைலாஷ்-மானசரோவர் சாலை என்றும் அழைப்பர். இச்சாலை இமயமலையில் 6,000 அடி முதல் 17,000 அடி உயரம் வரை அமைக்கப்பட்டுள்ளது. இது பிதௌரகட்-தவாகாட்-கட்டியாப்கர்-தார்ச்சுலா சாலையின் நீட்சியாகும். இச்சாலையனது எல்லைப்புறச் சாலைகள் அமைப்பால் நிறுவப்படுகிறது.

இச்சாலை நிறுவப்படுவதின் முக்கிய நோக்கம், இந்திய இராணுவப்படைகளையும், இராணுவ தளவாடங்களையும் இந்திய-திபெத் எல்லையில் விரைவில் கொண்டு சேர்க்கவும், கைலாஷ் மற்றும் மானசரோவர் ஏரி புனித யாத்திரையை பக்தர்கள் தங்களது யாத்திரையை மோட்டார் வாகனங்கள் மூலம் எளிதாகவும், குறுகிய காலத்தில் முடிக்கவும் உதவுகிறது.[1] இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 8 மே 2020 அன்று இச்சாலையை திறந்து வைத்தார்.[2][3]

இச்சாலையின் வழித்தடம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வழித்தடம் பிதௌரகட் நகரத்திலிருந்து தவாகாட் வரை 107.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இரண்டாவது கட்டம் தவாகாட் முதல் கட்டியாப்கார் வரை 19.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மூன்றாவது கட்டம், கட்டியாப்கார் முதல் லிபுலேக் வரை 80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு வழிப்பாதையாகும். தற்போது மூன்றாம் கட்ட சாலைப் பணி 76 கிலோ மீட்டர் நீளம் அளவில் முடிந்துள்ளது. மீதமுள்ள 4 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலைப்பணி 2020 ஆண்டிற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Remove ads

இச்சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு

இச்சாலை செல்லும் லிபுலேக் உள்ளிட்ட காலாபானி, லிம்புயாதுரா பகுதிகள், நேபாளம் தனது நாட்டிற்கு சொந்தம் கொண்டாடி வருவதால், இச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.[4][5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads