தி வீக் (இந்திய இதழ்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தி வீக் (The Week) என்பது இந்தியாவில் வெளியாகும் வார இதழ். இது மலையாள மனோரமா குழுமத்தினரால் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில வார இதழ் இதுவே. தற்சமயம் இதை கொச்சியில் இருந்து வெளியிடப்படுகிறது ,தற்போது புது தில்லி, மும்பை, பெங்களூர், கோட்டயம் ஆகிய இடங்களில் அச்சடிக்கின்றனர். இது தெற்காசிய இதழாளர் சங்க விருது, சிறந்த ஊடகத்திற்கான விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது.
Remove ads
வரலாறு
தலைமைப் பதிப்பாசிரியர்
தி வீக் இதழானது மலையாள மனோரமா குழுமத்தினால் டிசம்பர், 1982 இல் வெளியிடப்பட்டது. இரண்டு தலைமைப் பதிப்பாசிரியர்கள் இருந்தனர். தற்போது இந்தப் பொறுப்புகள் துறக்கப்பட்டது.
கே. எம்.மேத்யூ
கே. எம்.மேத்யூ நிறுவனர் மற்றும் தலைமைப் பதிப்பாசிரியர் பொறுப்பில் டிசம்பர் 25, 1988 வரையில் இருந்தார். இவர் மதுகுட்டிசயான் எனும் பெயரில் பரவலாக அறியப்படுகிறார். இந்திய செய்தி ஊடக அறக்கட்டளையின் தலைவராகவும், இந்திய செய்தி ஊடக சமூகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஆகஸ்டு 1, 2010 இல் இறந்தார். 1998 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசன் விருது கிடைத்தது.[2]
மம்மன் மேத்யூ
மம்மன் மேத்யூ, கே.எம். மேத்யூவின் மூத்த மகன் ஆவார்.[3] தலைமைப் பதிப்பாசிரியர் பதவியில் ஜனவரி 1, 1989 முதல் டிசம்பர் 9, 2007 வரை இருந்தார். இவர் தற்போது மலையாள மனோரமா பதிப்பகத்தின் தலைமை பதிப்பாசிரியராக இருக்கிறார். இவருக்கு 2005 ஆம் ஆண்டில் பத்மசிறீ கிடைத்தது.[4]
தற்போது தி வீக் இதழில் தலைமைப் பதிப்பாசிரியர்கள் இல்லை. கே. எம்.மேத்யூவின் இரண்டாவது மகனான பிலிப் மேத்யூ நிர்வாகப் பதிப்பாளராக ஜனவரி, 1989 முதல் பணியாற்றி வருகிறார்.
வெளியீட்டாளர்கள்
இந்த இதழின் முதல் வெளியீட்டாளர் பிலிப் மேத்யூ ஆவார். அவர் இந்தப் பொறுப்பில் டிசம்பர், 1988 வரை இருந்தார்.
ஜேக்கப் மேத்யூ: ஜனவரி 1, 1989 முதல் தற்போது வரை ஜேக்கப் மேத்யூ வெளியீட்டாளராக இருந்து வருகிறார். இவர் கே. எம்.மேத்யூவின் மூன்றாவது மகன் ஆவார். இவர் தற்போது சர்வதேச செய்தித்தாள்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்தப் பதவியைப் பெறும் இரண்டாவது ஆசியாக் கண்டத்தவர் மறும் முதல் இந்தியர் ஆவார்.[5]
பதிப்பாசிரியர்கள்
தி வீக் இதழிற்கு இரண்டு பதிப்பசிரியர்கள் இருந்தனர். இந்த பதவியானது அதற்குப் பிறகு துறக்கப்பட்டது.
வி. கே. பி. நாயர்: இவர் டிசம்பர் 26, 1982 முதல் சூன் 3, 1984 வரையில் பதிப்பாசிரியராக இருந்தார். இவருக்குப் பின் டி. வி. ஆர். செனாய் இந்தப் பொறுப்பினைப் பெற்றார். அவர் சூன் 10, 1984 முதல் டிசம்பர் 11, 1988 வரை நீடித்தார். இவருக்கு பத்ம பூசன் விருது 2003 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[6]
பொறுப்பு வகிக்கும் பதிப்பாசிரியர்கள்
தற்போதைய செய்தி ஊடகம் மற்றும் நூற்பதிவுச் சட்டத்தின்படி (1867) செய்தியை வெளியிடுவதன் முழு பொறுப்பானது அந்த இதழின் பொறுப்பு வகிக்கும் பதிப்பாசிரியர்களைச் சார்ந்தது ஆகும். தி வீக் இதழின் தற்போதைய பொறுப்பு வகிக்கும் பதிப்பாசிரியர் டி. ஆர். கோபாலகிருஷ்னன் ஆவார். இவர் இந்தப் பொறுப்பினை டிசம்பர் 18, 1988 இல் ஏற்றார்
Remove ads
நாளிதழ்ச் சிறப்பிணைப்பு மலர்
தி வீக் இதழுடன் இரண்டு நாளிதழ்ச் சிறப்பிணைப்பு மலர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் முதலாவது ஹெல்த் (உடல் நலம்) இரு வாரத்துக்கு ஒருமுறை வருகிறது. இதில் பொருத்தமுடைமை, உடல் நலனைப் பேணிக்காப்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டாவது வாலட் (பணப்பை) மாதம் ஒரு முறை வெளியிடப்படுகிறது. இதில் முதலீடு மற்றும் நிதித் திட்டமிடல் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads